செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) என்பது பொதுவாக கண் நோய்களைக் கண்டறியவும், மருத்துவ நோயறிதல் நடைமுறைக்கும், உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறியவும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது AI technology என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யப்படும் மூளை ஸ்கேன் மூலம் டிமென்ஷியாவை கண்டறிய முடியலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி இருக்கிறார்கள். இது தொடர்பான தீவிர ஆராய்ச்சிகளில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
டிமென்ஷியா என்பது நினைவாற்றல் இழப்பு, மொழியிழப்பு, சிக்கல் தீர்க்கும் திறனிழப்பு மற்றும் அன்றாட வாழ்க்கையில் தலையிடும் அளவுக்கு கடுமையானதாக இருக்கும் பிற சிந்தனை திறன்களை இழப்பதை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொது சொல். இதை முதுமை மறதி நோய் என்றும் கூறலாம். வாழ்க்கை அறிவியல் சிக்கல்களில் ஆராய்ச்சியை துரிதப்படுத்தும் பெரும் சவாலை சூப்பர் கம்ப்யூட்டர்கள் எடுத்து கொள்வதால், செயற்கை நுண்ணறிவு (AI) மிகவும் வளர்ச்சியடைந்து வருகிறது.
இதனிடையே ஒரு மூளை ஸ்கேன் மூலம் டிமென்ஷியா போன்ற நரம்பியல் கோளாறுகளைக் கண்டறிய AI அடிப்படையிலான ஒரு சிஸ்டமை ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்து வருகின்றனர். ஆராய்ச்சியாளர்களின் இந்த முயற்சியில் தற்போது டிமென்ஷியாவைக் கண்டறிய பல ஸ்கேன் மற்றும் டெஸ்ட்கள் தேவைப்படுகின்றன.
ALSO READ | மலையாள தாலிபான்கள் - சந்தேகத்தை கிளப்பும் கேரள காங்கிரஸ் எம்.பி சசிதரூர்!
இந்த AI சோதனையில் ஈடுபட்டு உள்ள நிபுணர்கள் குழு, தங்கள் முயற்சி னாய் ஏற்பட்டியவதற்கு முன்பே நோயறிதலை கண்டறிய வழிவகுக்கும் என்று நம்புவதாக கூறி இருக்கின்றனர். இதன் மூலம் குறிப்பிட்ட நோயால் நோயாளிகளுக்கு ஏற்படும் விளைவுகளை மேம்படுத் உதவலாம், அதே நேரத்தில் சிலவற்றை சரியாக கணிக்க உதவலாம் என்றும் ஆராய்ச்சி குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கோளாறு ஏற்படுவதற்கு முன்பே செய்யப்படும் முன்கூட்டியநோயறிதல் நடவடிக்கை உயிர்காக்கும் மற்றும் சிகிச்சை உத்திகளை மேம்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ALSO READ | ஆண் குழந்தைக்காக 8 முறை கருக்கலைப்பு, 1500 ஸ்டீராய்ட் ஊசிகள் - கொடூர கணவரிடம் பட்ட அவஸ்தைகள்!
இது தொடர்பான சோதனையில் ஈடுபட்டுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு , தங்களது முதல் வருட சோதனையில் ஏறக்குறைய 500 நோயாளிகளுக்கு "நிஜ உலக" (real-world) கிளினிக்கல் செட்டிங்கில் சோதனை செய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மூத்த மருத்துவ ஆராய்ச்சி இணை மற்றும் ஆலோசகர் மற்றும் மூத்த நரம்பியல் நிபுணரான டாக்டர் டிமோதி ரிட்மேன் கூறுகையில் 'AI system ஒரு அற்புதமான வளர்ச்சி'.
டிமென்ஷியா நோய்களின் தொகுப்பு உண்மையில் மக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எங்களது சோதனை முயற்சி வெற்றி பெற்றால், நோயாளிக்கு நோயறிதல் நடைமுறையில் இன்னும் கூடுதல் நம்பிக்கையை மருத்துவர்களால் அளிக்க முடியும். மேலும் அவர்களின் வாழ்க்கையை திட்டமிட உதவுவதற்காக நோயின் சாத்தியமான முன்னேற்றம் பற்றிய கூடுதல் தகவலை மருத்துவர்களால் கொடுக்க முடியும் என்பது ஒரு சிறப்பான விஷயம் என்றார்.
ALSO READ | 2025-க்குள் அனைத்து டூவீலர்களும் எலெக்ட்ரிக்காக இருக்க வேண்டும் - ஓலா இணை நிறுவனர் விருப்பம்!
நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை முன்கூட்டியே கணிப்பதன் மூலம் அதற்கான சிகிச்சைகள் ஆரம்பத்திலேயே துவக்கி விடலாம் அல்லது அந்த நோயின் முன்னேற்றத்தைக் குறைத்து, அதிக சேதத்தைத் தவிர்க்கலாம் என்று இந்த ஆய்வின் ஒரு பகுதியாக இருக்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோர்ட்ஸி கூறியிருக்கிறார். நோய் செயல்முறையின் துவக்கத்திலேயே டிமென்ஷியாவைக் கண்டறிவதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பது ஆராய்ச்சியின் மிக முக்கியமான குறிக்கோள் என்றாலும் இது இன்னும் ஆரம்ப நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Artificial Intelligence