• HOME
 • »
 • NEWS
 • »
 • international
 • »
 • பெருங்கடலில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை நீக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள கருவி

பெருங்கடலில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை நீக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள கருவி

பெருங்கடல்

பெருங்கடல்

ஜென்னி, 800 மீட்டர் நீளமுள்ள “செயற்கை கடற்கரை” (artificial coastline) ஆகும். இது குப்பைகளை பிடித்து இழுத்து செல்ல பயன்படுகிறது.

 • Share this:
  பிளாஸ்டிக் என்பது உலகில் மிகவும் பொதுவான மாசுபடுத்தியாகும். இது கிரகத்தின் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. ஆய்வின்படி, ஏரிகள், ஆறுகள் மற்றும் பெருங்கடல்கள் போன்ற நீர்நிலைகளில் கிட்டத்தட்ட 20 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு தவிர, கடலில் குவிந்துள்ள பிளாஸ்டிக் நீர்வாழ் விலங்குகளுக்கு மிகவும் அச்சியுறுத்தலாக இருக்கின்றன. குப்பை உமிழ்வு வீதம் தூய்மைப்படுத்தும் விகிதத்தை விட அதிகமாக இருப்பதால் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் குவிகின்றன என பல ஆய்வுகளும் அறிக்கை வெளியிட்டுள்ளன.

  இந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு முதல் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் கழிவு மற்றும் தூய்மை விகிதங்களில் உள்ள வேறுபாட்டை சமன் செய்ய அரும்பாடுபட்டு வருகிறது. டச்சு கண்டுபிடிப்பாளர் போயன் ஸ்லாட் என்பவரால் நிறுவப்பட்ட பெருங்கடல் தூய்மைப்படுத்தல் (Ocean Cleanup) என்ற திட்டத்தை இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. கடல் பிளாஸ்டிக்கை சுத்தம் செய்வதை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 27 அன்று விக்டோரியாவின் கடற்கரையிலிருந்து இந்த தூய்மைப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

  பெருங்கடலை தூய்மைப்படுத்தும் இந்த சமீபத்திய திட்டம் ஜூலை 13ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டது. மேலும் இது தி கிரேட் பசிபிக் கார்பேஜ் பேட்ச்-ஐ நோக்கி தன் பயணத்தை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேட்ச் கலிஃபோர்னியா மற்றும் ஹவாய் இடையே காலப்போக்கில் சேகரிக்கப்பட்ட ஒரு பெரிய குப்பைக் குவியல் ஆகும். இந்த குப்பை குவியல்கள் 1.6 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த பெருங்கடல் தூய்மைப்படுத்துதல் திட்டத்தில் என்ஜிஓவின் அதாவது தொண்டு நிறுவனத்தின் சமீபத்திய பிளாஸ்டிக் சேகரிக்கும் தொழில்நுட்பமான சிஸ்டம் 002, அதாவது ‘ஜென்னி' என்று அழைக்கப்படும் கருவி பயன்படுத்தப்பட உள்ளது.   
  View this post on Instagram

   

  A post shared by The Ocean Cleanup (@theoceancleanup)


  ஜென்னி, 800 மீட்டர் நீளமுள்ள “செயற்கை கடற்கரை” (artificial coastline) ஆகும். இது குப்பைகளை பிடித்து இழுத்து செல்ல பயன்படுகிறது. இறுதியில் இந்த குப்பைகள் "தக்கவைப்பு மண்டலத்தில்" அதாவது பசிபிக் கார்பேஜ் பேட்சில் சேகரிக்கப்படும். இந்த ஆர்டிபிசியல் கோஸ்ட்லைன் இரண்டு பெரிய கப்பல்களின் உதவியுடன் நகர்த்தப்படுகிறது. இந்த கப்பல்கள் வினாடிக்கு 0.75 மீட்டர் வேகத்தில் நகரும். இந்த கப்பல்கள் இரண்டும் கம்ப்யூட்டர் ஜெனரேட்டட் மாதிரிகளைப் பயன்படுத்தும். இதன் மூலம்
  பெருங்கடல் தூய்மைபடுத்தும் கப்பல்கள் “இயற்கை ஹாட்ஸ்பாட்கள்” என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக் செறிவுள்ள குப்பைகள் இருக்கும் இடத்திற்கு செல்லவும் மற்றும் இலக்கு இடங்கள் வழியாக செல்லவும் முடியும்.

  சிஸ்டம் 002, aka ஜென்னி, தன்னாட்சி வழிசெலுத்தல் ஆகும். இது நீண்டகால பிளாஸ்டிக் தக்கவைப்பு மற்றும் கடலில் அதன் ஆயுள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த திட்டம் பிளாஸ்டிக் பிரித்தெடுத்தல், உகந்த வேகம், நீண்ட ஆயுளின் தாக்கம், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் அதன் பயணத்தில் ஒட்டுமொத்த செயல்பாடு போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தும். சிஸ்டம் 001 இன் கற்றல்களை அடிப்படையாகக் கொண்டு ஜென்னி வடிவமைக்கப்பட்டதைப் போலவே, இந்த நுண்ணறிவு ஓஷன் கிளீனப் மிகவும் மேம்பட்ட மற்றும் நம்பகமான கணினி 003 ஐ உருவாக்க உதவும் என்றும் தொன்று நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் இந்த ஜென்னி கருவியின் சோதனைகள் எதிர்பார்த்தபடி நடந்தால், பெருங்கடல் தூய்மைப்படுத்தல் நமது நீர்நிலைகளை சுத்தம் செய்வதற்கான மிக நிலையான வழியை உருவாக்கக்கூடும். இந்த தொழில்நுட்பத்தால் ஒவ்வொரு 15 விநாடிகளிலும் சுமார் 1.3 ஹெக்டேர் பரப்பளவை சுத்தம் செய்ய முடியும் என்பதே திட்டத்தின் குறிக்கோள். இதையடுத்து 2040க்குள் கடல்களில் 90% பிளாஸ்டிக்கை அகற்றுவதே தி ஓஷன் கிளீனப்பின் நீண்டகால குறிக்கோள் என்றும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது வரை, கடலில் உள்ள பிளாஸ்டிக்குகளை நீக்க ஆண்டுக்கு பில்லியன் டாலர்களை நிறுவனம் செலவழித்து வருகிறதாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Karthick S
  First published: