• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • மும்பை சிறையில் எலி, பூச்சிகள் இருக்கும்... என்னை அனுப்பக் கூடாது...! இங்கிலாந்து நீதிமன்றத்தில் நீரவ் மோடி வாதம்

மும்பை சிறையில் எலி, பூச்சிகள் இருக்கும்... என்னை அனுப்பக் கூடாது...! இங்கிலாந்து நீதிமன்றத்தில் நீரவ் மோடி வாதம்

நீரவ் மோடி

நீரவ் மோடி

சிறைச்சாலையின் வீடியோவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள இந்திய தரப்பு, சிறையில் அவருக்கு தனியாக 3 அடிக்கு வசதிகள் இருக்கும் என்றும், எலி, பூச்சிகள் இருக்காது என்றும் கூறியுள்ளது.

  • Share this:
    மும்பை சிறையில் எலி மற்றும் பூச்சிகள் உள்ளதால் தன்னை இந்தியாவிற்கு அனுப்பக் கூடாது என தொழிலதிபர் நீரவ் மோடி இங்கிலாந்து நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.

    வங்கி மோசடி வழக்கில் சிக்கியுள்ள நீரவ் மோடி இங்கிலாந்திற்கு தப்பிச் சென்று அங்கு வசித்து வருகிறார். அவரை இந்தியா கொண்டு வருவது தொடர்பான வழக்கில், சிறையில் மனித உரிமை மீறல் இருந்தால் அனுப்ப முடியாது என இங்கிலாந்து நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, தன்னை அடைக்க உள்ளதாக கூறப்படும் மும்பை சிறையில் எலி, பூச்சித் தொல்லை இருப்பதாகவும், மூடப்படாத சாக்கடை, அருகில் உள்ள சேரியில் இருந்து வரும் இரைச்சல் ஆகியவற்றால் தனது உரிமை பாதிக்கப்படும் என்று நீதிமன்றத்தில் நீரவ் மோடி வாதிட்டுள்ளார்.

    அதற்கு பதிலடியாக சிறைச்சாலையின் வீடியோவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள இந்திய தரப்பு, சிறையில் அவருக்கு தனியாக 3 அடிக்கு வசதிகள் இருக்கும் என்றும், எலி, பூச்சிகள் இருக்காது என்றும் கூறியுள்ளது. 20 அடி உயர சுவர் உள்ளதால் அருகில் இருந்த எந்தவித இரைச்சலும் கேட்காது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: