முகப்பு /செய்தி /உலகம் / ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பும் கலை பொக்கிஷங்கள்

ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பும் கலை பொக்கிஷங்கள்

சோழர்கால சிலைகள்

சோழர்கால சிலைகள்

திருஞானசம்பந்தர் மற்றும் நாயன்மார் சிலைகள் தமிழகத்தில் இருந்து திருடப்பட்டவை.

  • 1-MIN READ
  • Last Updated :

ஆஸ்திரேலியாவின் கன்பெர்ரா தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள, சேழர்கால சிலைகள் உள்ளட்ட இந்தியாவின் கலை மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் 8 பழங்கால சிலைகள் மற்றும் ஆறு ஓவியங்கள் ஆஸ்திரேலிய இந்தியாவிற்கு அனுப்பப்பட உள்ளன.

ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில், தமிழகத்தின் சோழர் காலச் சிலைகள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில், சிலை கடத்தல் குற்றவாளியான சுபாஷ் கபூரிடம் இருந்து வாங்கப்பட்ட மற்றும் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 13 கலைப் பொருட்கள் உட்பட 14 பொருட்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என்பதை அருங்காட்சியகம் கண்டறிந்துள்ளது.

இந்நிலையில், இந்த கலைப்பொருட்களை இந்தியாவிடமே திரும்ப ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து, அருங்காட்சியகத்தின் இயக்குநர் நிக் மிட்செவிட்ச் கூறுகையில், “இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் கூட்டு முயற்சியால் கலாச்சார ரீதியான பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைப்பதில் பெருமைப்படுகிறோம். விரைவில் சிலைகள் இந்தியாவிற்கு அனுப்பப்படும்.” என்று கூறியுள்ளார். மேலும், சிலை கடத்தல் பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்தியாவின் கலை மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் 8 பழங்கால சிலைகள் மற்றும் ஆறு ஓவியங்கள் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட உள்ளன. ஆஸ்திரேலியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் இந்திய வரலாற்றை கூறும் ஏராளமான சிலைகளும், ஓவியங்களும் இருக்கின்றன. அவற்றை மீட்டு, இந்தியாவுக்குக் கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இந்நிலையில், இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் அவை, தமிழகம், குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஆந்திர பிரதேசம், மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவை என்று தெரியவந்துள்ளது. அதன்படி, இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் இந்த கலை பொருட்கள் அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசால் அனுப்பி வைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Must Read : கோவிலுக்குள் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களை அனுமதிப்பதா? - அருள்வாக்கு தந்த பூசாரி

அதன்படி, நடனம் ஆடும் நிலையில் இருக்கும் திருஞானசம்பந்தர் மற்றும் நாயன்மார் சிலைகள் தமிழகத்தை சேர்ந்தவை. இவை சீர்காழிக்கு அருகில் உள்ள சாயாவனம் கோயிலில் இருந்து திருடப்பட்டவை என்று தெரியவந்துள்ளது. இதேபோல, மகிஷாசுர மர்த்தினி கற்சிலை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தது. துர்கை, எருமை மேல் இருப்பது போன்ற காட்சியுடைய அந்த சிலை 12ஆம் நுாற்றாண்டில் வடிவமைக்கப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது.

ஒரு நாட்டில் இருந்து திருடப்பட்ட கலைப் பொருட்கள் அந்த நாட்டிற்கு உரியவைதான் என்றும், அவை அந்த நாட்டுக்கே திருப்பி ஒப்படைக்க வேண்டும் எனவும் ஐ.நா. சபை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Ancient statues, Australia, Painting