• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • வியக்கத்தக்க வகையில் மாறிய கார்பன் சுழற்சி, குளிர்வடைந்த பூமி – தாவரங்களின் வருகை பற்றிய ஆய்வு முடிவு சொல்வது என்ன?

வியக்கத்தக்க வகையில் மாறிய கார்பன் சுழற்சி, குளிர்வடைந்த பூமி – தாவரங்களின் வருகை பற்றிய ஆய்வு முடிவு சொல்வது என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

சுமார் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கார்பன் சுழற்சி வியத்தகு முறையில் மாறியது என்று லண்டன் மற்றும் யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு புதிய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

  • Share this:
நீரால் சூழ்ந்திருக்கும் நமது கிரகத்தில், கார்பன் சுழற்சி என்பது புதிய உயிரினம் வெளிப்படுவதற்கு உதவிய முக்கிய செயல்முறைகளில் ஒன்று. கார்பன் சுழற்சி என்பது காற்று மண்டலம், கடல், தாவரங்கள், உயிரினங்கள் மற்றும் நிலம் முழுவதும் உள்ள கார்பன் அணுக்களின் இயக்கம் மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றைக் குறிக்கிறது. "இயற்கை தெர்மோஸ்டாட்" ஆக செயல்படும் கார்பன் சுழற்சி நீண்ட காலமாக பூமியின் வெப்பநிலையை ஒழுங்கு படுத்தி வருகிறது.

இருப்பினும், இன்று நாம் எதிர்கொள்ளும் இந்த முக்கிய வாழ்க்கைச் சுழற்சி, சுமார் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட மிகவும் வித்தியாசமானது என்று ஆய்வு தெரிவிக்கின்றது. சுமார் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கார்பன் சுழற்சி வியத்தகு முறையில் மாறியது என்று லண்டன் மற்றும் யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு புதிய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.இது சட்டென்று ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறும் சீதோஷ்ண நிலைக்கு வழிவகுத்தது. இந்த பெரிய மாற்றம், வெப்பம் மற்றும் பனிக்காலங்கள் என்று மட்டுமே மாறிய பருவ நிலையில் மிகப்பெரிய மாறுபாட்டை ஏற்படுத்தி, பூமியை குளிர்ச்சியாக்கியது.

Also Read: ஆரம்ப கால பறக்கும் கார்களின் விலை என்னவாக இருக்கும் தெரியுமா?

இந்த மாற்றத்திற்கு முன்பு, காற்று மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு செறிவு தற்போது இருப்பதை விட அதிகமாக இருந்தது மற்றும் கிரீன்ஹவுஸ் விளைவின் காரணமாக, சீதோஷ்ண நிலை மிகவும் வெப்பமாக இருந்தது. கார்பன் சுழற்சியில் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியதில் நிலங்களில் தாவரங்களின் வளர்ச்சி ஆட்கொண்டதும் ஒரு முக்கியக் காரணம் என்பது ஆராய்ச்சியின் முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும்.

இதுகுறித்து ஆய்வின் மூத்த ஆசிரியர் பிலிப் போக் வான் ஸ்ட்ராண்ட்மேன் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டதாவது, இந்த மாறுபாடு "இரண்டு முக்கிய உயிரியல் கண்டுபிடிப்புகளுடன் இணைந்துள்ளதாகத் தோன்றுகிறது: நிலத்தில் தாவரங்கள் வளர்ச்சி மற்றும் நீரில் இருந்து சிலிக்கானை பிரித்தெடுத்து, தங்களுக்கான செல் சுவர்களையும், எலும்புக் கூடையும் உருவாக்கிய நீர்வாழ் உயிரினங்கள் வளர்ச்சி" என்று கூறியுள்ளார். நாசா ஆதரவளித்த இந்த ஆய்வு ஜூலை 14 அன்று Nature இதழில் வெளியிடப்பட்டது.

Also Read:  கூகுள் உங்களை எல்லா இடங்களிலும் கண்காணிக்கிறதா? விளம்பர விற்பனைக்காக மின் அஞ்சல்களை படிக்கிறார்களா?

நிலத்தை அடிப்படையாகக் கொண்ட தாவரங்கள் பூமியின் காற்று மண்டலத்தின் குளிர்-வெப்ப சுழற்சியைத் தூண்டுவதற்கு முன்பு, இந்த சுழற்சி மாற்றமே சிக்கலான உயிரின வடிவங்களின் பரிணாமத்தை துரிதப்படுத்தியது என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். இதன் விளைவாக, நில-வாழ் விலங்குகள் முதல் முறையாக உருவாகின.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆய்வாளர்கள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு இடங்களிலிருந்து 600 பாறை மாதிரிகளை எடுத்து லித்தியம் ஐசோடோப்புகளுக்காக பகுப்பாய்வு செய்தனர். அவர்களின் பகுப்பாய்வு, நிலத்தில் தாவரங்களின் உருவாக்கம் மற்றும் விரிவாக்கம், களிமண் உற்பத்தியில் ஏற்பட்ட பெரிய மாற்றத்துடன் ஒத்துப்போனது என்பதைக் கண்டறிந்தது. மேலும், நிலத்தில் வளர்ந்த தாவரங்கள் காற்று மண்டலத்திலிருந்து கார்பன் டை ஆக்சைடை ஈர்த்தன. அவை சிதைந்தபோது, மீண்டும் வெளியிடவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: