தாக்கப்பட்ட அர்னால்டு... வைரலான வீடியோ காட்சி!

மர்ம நபர் பறந்து வந்து எட்டி உதைக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Web Desk | news18
Updated: May 20, 2019, 3:15 PM IST
தாக்கப்பட்ட அர்னால்டு... வைரலான வீடியோ காட்சி!
அர்னால்டு (Image: AP)
Web Desk | news18
Updated: May 20, 2019, 3:15 PM IST
ஹாலிவுட் பிரபலம் அர்னால்டு மீது மர்ம நபர் ஒருவர் எட்டி உதைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹாலிவுட் சூப்பர்ஸ்டாரான அர்னால்டு சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பெர்க் நகரில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்றார். 71 வயதான அர்னால்டு ரசிகர்களுடன் அந்த விளையாட்டு விழாவில் கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர் ஓடிவந்து அர்னால்டின் முதுகில் எட்டி உதைத்தார். திடீரென தாக்கப்பட்டாலும் தெளிவாகவே நின்றுகொண்டிருந்தார் அர்னால்டு. அந்த மர்ம நபரை அர்னால்டின் பாதுகாவலர்கள் அந்த இடத்திலிருந்து வெளியேற்றினர்.


மர்ம நபர் பறந்து வந்து எட்டி உதைக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அர்னால்டு தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தனது ரசிகர்களுடன் விழாவில் தான் தொடர்ந்து கலந்துரையாடியதாகத் தெரிவித்துள்ளார்.“அனைவரும் ஆதரவுக்கும் நன்றி. வருத்தப்படும் அளவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கூட்டத்தில் எப்போதும் நெருக்கித் தள்ளப்படுவேன். அதுமாதிரி கூட்டத்தில் தள்ளப்பட்டதாகத் தான் நினைத்தேன். ஆனால், உங்களைப் போலவே வீடியோ பார்த்தப்பின்னர் தான் நான் எட்டி உதைக்கப்பட்டிருக்கிறேன் என்றே தெரிந்தது. நல்ல வேளை, அந்த முட்டாளால் என் கலந்துரையாடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பார்க்க: ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய முதல் ஆசிய நாடு..!
First published: May 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...