ஜம்மு- காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்புடன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் தனித்தனியாக தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதற்கிடையே, பாகிஸ்தானுடன் போரிடுவதற்கு இந்தியா தயார் நிலையில் இருப்பதாக ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை குறித்து, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் தொலைபேசி வழியாக ஆலோசனை நடத்தினார். 30 நிமிடங்கள் வரை இந்த உரையாடல் நடைபெற்றது.
அப்போது சில தலைவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், காஷ்மீரில் அமைதி திரும்பக்கூடாது என்ற வண்ணம் செயல்பட்டு வருவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை மறைமுகமாக சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பயங்கரவாதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தவிர்ப்பதையும் பிரதமர் எடுத்துரைத்தார். வறுமை, கல்வியறிவின்மை மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடும் எவருடனும் ஒத்துழைக்க இந்தியா தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிபர் ட்ரம்புடன் பேசி 2 நாட்கள் ஆன நிலையில், மோடி மற்றும் ட்ரம்பின் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த மாதம் வாஷிங்டனில் இம்ரான் கான் உடனான சந்திப்பின் போது, காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்களைத் தணிப்பதற்கு, அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
எனினும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை இந்திய அரசு நிராகரித்தது. இந்தநிலையில், இவ்விவகாரம் குறித்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மகமூத் குரேஷி, இம்ரான் கான் உடன் நேற்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் காஷ்மீர் குறித்து தொலைபேசி வழியாக பேசியதாக தெரிவித்தார்.
இந்தப் பிரச்னையை அமெரிக்க அரசு உரிய முறையில் தீர்த்து வைக்கும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே டெல்லியில் பேசிய ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத், பாலகோட் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானுடன் போரிடுவதற்கு இந்தியா தயார் நிலையில் இருப்பதாக கூறினார். மேலும் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கு பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.
காஷ்மீரிலிருந்து செல்லும் பேருந்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி நிர்வாகம் அனுமதிக்காததால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த 27 பேர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் நிலையில், எல்லை பகுதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும் படிக்க... இம்ரான்கானைப் போல பேசுகிறார் ஸ்டாலின் - அமைச்சர்
அரசியல், சினிமா, வைரல், செய்திகளைஉடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Donald Trump, Imran khan, Jammu and Kashmir, Narendra Modi