முகப்பு /செய்தி /உலகம் / அர்ஜென்டினா துணை அதிபர் நூலிழையில் உயிர் தப்பிய அதிசயம்.. பரபரப்பு காட்சிகள்!

அர்ஜென்டினா துணை அதிபர் நூலிழையில் உயிர் தப்பிய அதிசயம்.. பரபரப்பு காட்சிகள்!

அர்ஜென்டினா துணை அதிபரை கொலை செய்ய முயற்சி

அர்ஜென்டினா துணை அதிபரை கொலை செய்ய முயற்சி

Argentina | கொலை முயற்சியில் இருந்து தப்பித்த அர்ஜெண்டினா துணை அதிபர் ஏற்கனவே இரு முறை அதிபராக இருந்துள்ளார்.

  • Last Updated :
  • int, Indiabuenos airesbuenos airesbuenos aires

அர்ஜென்டினா நாட்டில் துணை அதிபரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சித்த 35 வயது நபரை காவல்துறை கைது செய்துள்ளது. அர்ஜென்டினா நாட்டின் துணை அதிபர் கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் தே கீயர்ச்சனர். இவர் தலைநகர் பியூனஸ் அயர்ஸில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களை சந்தித்து விட்டு வெளியே செல்லவிருந்தார். அப்போது அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் திடீரென்று ஒரு நபர் அருகே வந்து கையில் இருந்த துப்பாக்கியை தலை மீது வைத்து சுட முயற்சித்தார்.

அவர் துப்பாக்கியின் ட்ரிகரை அழுத்திய போது நல்வாய்ப்பாக அது வேலை செய்யவில்லை. இதை பார்த்த, பதறிப்போன துணை அதிபரின் ஆதரவாளர்களும் அந்த நபரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இவர் கொலை முயற்சியில் ஈடுபட்ட காணொளி தத்ரூபமாக பதிவாக சமூக வலைத்தளங்களில் வைராலகி வருகிறது.

கைது செய்யப்பட்ட நபருக்கு 35 வயது எனவும் அவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் எனவும் இவரின் பின்புலம் குறித்து விசாரிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், அந்த துப்பாக்கி 5 தோட்டாக்களுடன் லோட் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு அந்நாட்டின் அதிபர் அல்பெர்தோ பெர்னாட்டஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 1983ஆம் ஆண்டில் அர்ஜென்டினா ஜனநாயகத்தின் பாதையில் திரும்பிய பின் நடைபெற்றுள்ள மிக ஆபத்தான சம்பவம் என இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அந்நாட்டில் தேசிய விடுமுறை அறிவித்துள்ளது.

இந்த கொலை முயற்சி சம்பவத்திற்கு வெனிசுலா அதிபர் முட்ரோ, போலிவியா அதிபர் லூயிஸ் அர்கே, அர்ஜென்டினாவுக்கான அமெரிக்க தூதர் மார்க் ஸ்டேன்லி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொலை முயற்சியில் இருந்து தப்பித்த துணை அதிபர் கிரிஸ்டினா 2007 முதல் 2015 வரை இரு முறை அதிபராக இருந்துள்ளார். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், குற்றச்சாட்டுக்கள் நிருபணமானால் கிறிஸ்டினா 12 ஆண்டுகள் சிறை செல்வார்.

இதையும் படிங்க: அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் சீக்கிரம் வயதாகும்.. சர்வதேச ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சமீபத்தில், ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

First published:

Tags: Argentina, Murder