2022 நவம்பர் 20 ஆம் தேதி கத்தாரில் தொடங்கிய சர்வதேச கால்பந்து போட்டியானது கடந்த டிசம்பர் 18 அன்று நிறைவு பெற்றது. இந்த கால்பந்து போட்டி இறுதியில் அர்ஜென்டினா வெற்றிபெற்றதைக் கொண்டாட மேலாடையை கழற்றி சுழற்றிய அந்நாட்டு ரசிகை மீது கத்தார் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்ற பேச்சு வைரலாக பரவி வருகிறது.
சர்வதேச கால்பந்து போட்டியை நடத்துவதற்காக கத்தார் பல விதிமுறைங்களைக் கொண்டுவந்தது. விளையாட்டு மைதானத்திற்குள் பீர் எடுத்துச்செல்ல கட்டுப்பாடு, ஆடைகளில் ஒழுங்குமுறை என்று புதிய விதிகளை கத்தார் விதித்தது.
கால்பந்து காண வரும் ரசிகர்கள் , வெளிநாட்டு பார்வையாளர்கள் நாட்டின் கலாச்சாரம் மற்றும் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. தோளில் இருந்து முழங்கால் வரை ஆடை அணிந்திருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளை விதித்தது.
இதையும் படிங்க : சீனா, அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. அவசர ஆலோசனையில் இந்தியா?
கத்தார் சட்டப்படி, பொதுவெளியில் எவரேனும் தங்கள் உடலை நிர்வாணமாக வெளிப்படுத்தினால் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
இந்நிலையில் கடந்த 18 அன்று மாலை நடைபெற்ற கால்பந்து இறுதி போட்டியில் பிரான்ஸை தோற்கடித்து 36 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா வெற்றி வாகையை சூடியது. மெஸ்ஸி தலைமையிலான இந்த அணியின் வெற்றியை உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.
அப்படி அரங்கில் இருந்த அர்ஜென்டினாவின் பெண் ரசிகர் ஒருவர் தனது மேலாடையை கழற்றி அதை காற்றில் சுழற்றி தனது வெற்றி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த அக்காட்சி இணையத்தில் வேகமாக பரவ தொடங்கியது.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானில் பெண்கள் உயர்கல்வி பெறுவதற்கு தடை - அதிரடி உத்தரவால் ஷாக் கொடுத்த தாலிபான்!
பெரும் கட்டுப்பாடுகளை விதித்த அரசு இந்த செயலுக்காக அந்த வெளிநாட்டுப் பெண்ணை கைதுசெய்து சிறையில் அடைக்கும் வாய்ப்பு இருப்பதால் இது குறித்த விவாதங்கள் எழுந்து வருகிறது. ரசிகை வெற்றிக்களிப்பில் செய்து விட்டார். அவரை மன்னிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் அந்த பெண் மீது கத்தார் அரசு இப்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. இதற்கு முன்னர், குரோஷியா நாட்டை சேர்த்த மாடல் ஒருவர் அவர்களது நாட்டு அணி வெற்றி பெற்றால் மைதானத்தில் இருந்து நிர்வாணமாக செல்வதாக சர்ச்சை கருத்தை வெளியிட்டிருந்தார். ஆனால் குரோஷியா தோல்வியைத் தழுவியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: FIFA 2022, FIFA World Cup 2022, Qatar