உலகம் முழுவதும் பாலின சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்திற்கான குரல் தீவிரமாக ஒலித்து வருகிறது. ஆண், பெண் சமத்துவம் என்று மட்டும் அல்லாது, மாற்று பாலினத்தவர்களுக்கான உரிமை, சமத்துவத்தை முன்னிறுத்தி பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் முக்கிய நகர்வாக தென்னமெரிக்க நாடுகளில் பாலின நடுநிலை மொழி பயன்படு ஊக்குவிக்கப்படுகிறது. இந்நாடுகளில் ஸ்பானெஷ், போர்த்துகீஸ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகள் பயன்படுத்தப்படும் நிலையில், இந்த மொழிகளில் பாலின நடுநிலை வார்த்தைகளை உருவாக்கி மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
உதாரணமாக, ஸ்பானிஷ் மொழியில் நண்பர்கள் என்ற பொருள்படும் “amigos,” என்ற வார்த்தைக்கு வார்த்தைக்கு பதிலாக “amigues எனவும் “todos என்ற வார்த்தைக்கு பதிலாக “todxs எனவும் மாற்றப்பட்டு பாலின நடுநிலை மொழியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த மாற்றத்திற்கு மொழி அறிஞர்களும் அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இது மொழியின் அமைப்பு இலக்கணம் ஆகியவற்றை மீறுவதாக இவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்நிலையில் தென்னமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் பாலின நடுநிலை மொழியை பயன்படுத்த தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: சைபீரியாவின் நித்தியானந்தா.. இயேசுவின் அவதாரம் எனக் கூறும் செர்கே டோரோப்..
அங்குள்ள கல்வி நிலையங்களில் இந்த புதிய வகை மொழி பிரயோகம் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் விதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாலின நடுநிலை மொழிக்கு தடை விதித்த முதல் நாடாக அர்ஜென்டினா உள்ளது. அரசின் இந்த தடை அறிவிப்பு மாற்று பாலினத்தவர்கள், சமூக செயற்பாட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Argentina, Gender equality, Transgender