அர்ஜெண்டினாவில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

Argentina

 • Share this:
  அர்ஜெண்டினாவில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்க வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

  லத்தீன் அமெரிக்க நாடுகளில் கருக்கலைப்புக்கு கடுமையான சட்டதிட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. கர்ப்பத்தால் ஒரு பெண்ணின் உயிருக்கு ஆபத்து நேரும் என்றாலோ அல்லது பலாத்காரத்தின் மூலம் அந்தப் பெண் கருவுற்றாலோ மட்டுமே அங்கு கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

  இதனால் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் முன்பு திரண்ட பெண்கள் தங்கள் சின்னமான பச்சை நிற கைக்குட்டைகளை அசைத்தும், பச்சை குத்திக் கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  Published by:Sankaravadivoo G
  First published: