நார்வே பனிப்பாறையில் 500 ஆண்டுகள் பழமையான மெழுகுவர்த்தி பெட்டி கண்டுபிடிப்பு!

நார்வேயில் லெண்ட்பிரீன் பனிப்பாறை பகுதியின் மலைகளில் தேன் மெழுகு எச்சங்கள் அடங்கிய 500 ஆண்டுகள் பழமையான மரப்பெட்டியை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நார்வேயில் லெண்ட்பிரீன் பனிப்பாறை பகுதியின் மலைகளில் தேன் மெழுகு எச்சங்கள் அடங்கிய 500 ஆண்டுகள் பழமையான மரப்பெட்டியை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

  • Share this:
நார்வேயில் லெண்ட்பிரீன் பனிப்பாறை பகுதியின் மலைகளில் தேன் மெழுகு எச்சங்கள் அடங்கிய 500 ஆண்டுகள் பழமையான மரப்பெட்டியை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நார்வேயில் லெண்ட்பிரீன் பனிப்பாறை பகுதியின் மலைகளில் தேன் மெழுகு எச்சங்கள் அடங்கிய 500 ஆண்டுகள் பழமையான மரப்பெட்டியை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட போது மரப்பெட்டியில் அதன் மூடி இருந்ததாக கூறப்படுகிறது. நார்வேயில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு, உருகும் பனிப்பாறைகள் பல ஆச்சரியங்களை தருவதாக தெரிவித்துள்ளனர்.

சீக்ரெட்ஸ் ஆஃப் தி ஐஸ் பக்கத்தின் பேஸ்புக் பதிவின் படி, கலாச்சார வரலாற்று அருங்காட்சியகம் கண்டுபிடிக்கப்பட்ட பெட்டியின் உள்ளடக்கங்களை ஆராய்ந்தது. அதன்படி பெட்டியில் இருந்த சில மெழுகு எச்சங்கள் தேன் மெழுகு என்று கண்டறியப்பட்டது. ரேடியோ கார்பன் டேட்டிங் மூலம் அந்த பெட்டி பைன்வுட்டால் செய்யப்பட்டது என்றும் அது கி.பி 1475-1635 ஆம் ஆண்டிற்கு முந்தையது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவை வெளியிட்ட பேஸ்புக் பேஜ் இன்லாண்டெட் கவுண்டியின் பனிப்பாறை தொல்பொருள் திட்டத்தால் இயக்கப்படுகிறது.

ALSO READ | ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்து தென் ஆஃப்ரிக்க பெண் உலக சாதனை

மெழுகுவர்த்தி பெட்டி சமீபத்திய காலங்களில் அப்பகுதியில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தது பண்டைய காலத்தைச் சேர்ந்தது ஆகும். இருப்பினும் மெழுகுவர்த்தி பெட்டிகள் அவர்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் பழமையானவை என்று அறிந்தபோது அது விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தியது.இந்த பழங்கால பெட்டி இன்லாண்டெட்டில் உள்ள பனிப்பாறை தொல்பொருள் திட்டத்துடன் தொடர்புடைய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொல்லியல் ஆராய்ச்சி இன்லாண்டெட் கவுண்டி கவுன்சில் மற்றும் நார்வேயின் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் கலாச்சார வரலாற்று அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டுறவு திட்டமாகும்.மேலும் இந்த திட்டத்தின் பனிப்பாறை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2011 ஆம் ஆண்டில் லெண்ட்பிரீன் பனிப்பாறை உருகும்போது கண்டுபிடிக்கப்பட்ட மலைப்பாதைகளை ஆய்வு செய்யத் தொடங்கினர். அவர்கள் 1900 மீட்டருக்கு குறிப்பிட்ட பகுதியைத் தேர்ந்தெடுத்து ஆராயத் தொடங்கினர். ஏனெனில் 1970 மற்றும் 1980 களில் பல கலைப்பொருட்கள் அந்த பகுதியில் காணப்பட்டதாகக் கூறப்பட்டது.

ALSO READ | பெற்றோரின் காரை எடுத்துக்கொண்டு ஜாலி டூர் செல்ல முயன்ற சிறுமிகள்: விபத்தில் முடிந்த சோகம்!

பல ஆண்டுகளாக, கோடைகாலத்தில் கரடுமுரடான நிலப்பரப்புக்குச் சென்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சியை மேற்கொள்வர். பின்னர் குளிர்காலத்தில் பனி உருகி பனி மலைகள் மற்றும் பாதைகளை மறைப்பதற்குள் அங்கிருந்து திரும்பி விடுவர்.

இதுவரை நடத்திய ஆராய்ச்சியின்படி வைக்கிங் காலத்தைச் சேர்ந்த ஈட்டிகள், பனிப்பொழிவுள்ள மலைகளில் கலைமான் வேட்டையாடுவதைக் குறிக்கும் மரத்தால் செய்யப்பட்ட குச்சிகள், பனிக்கட்டிகளில் புதைக்கப்பட்ட கண்கவர் பொருட்களை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அந்த பனியில் குதிரை சாணமும் ஒப்பீட்டளவில் அதிக அளவில் இருந்தது.இந்த பகுதி சரியான மலைப்பாதை என்பதற்கான சான்றாக இவை இருப்பதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர். மேலும் குதிரையின் மண்டை ஓடுகள், குதிரைக் காலணிகள் மற்றும் குதிரை தீவனங்களின் எச்சங்களையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.சுவாரஸ்யமாக, கல்லால் கட்டப்பட்ட தங்குமிடங்களும் இடிபாடுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிப்புகள் கடந்த ஆண்டு பழங்கால இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
Published by:Sankaravadivoo G
First published: