Home /News /international /

குல்புஷன் ஜாதவை பாகிஸ்தான் விடுவிக்காது - மறைமுகமாக கூறிய இம்ரான் கான்

குல்புஷன் ஜாதவை பாகிஸ்தான் விடுவிக்காது - மறைமுகமாக கூறிய இம்ரான் கான்

இம்ரான் கான்

இம்ரான் கான்

2017-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் குல்புஷனுக்கு தூக்குத் தண்டனை விதித்தது.

  • News18
  • Last Updated :
    “குல்புஷன் ஜாதவை விடுவித்து இந்தியாவுக்கு அனுப்ப கூடாது என்ற சர்வதேச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்" என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரியாக பணியாற்றிய குல்புஷன் ஜாதவ், 2016-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி பாகிஸ்தானை உளவு பார்தத்தாக அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டார். 2016-ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி குல்புஷன் கைது செய்யப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு தகவல் கொடுத்தது.

    2017-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் குல்புஷனுக்கு தூக்குத் தண்டனை விதித்தது. ஜாதவ்வுக்கு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக இந்திய அரசு ஐ.நாவில் முறையிட்டது. மேலும், பாகிஸ்தான் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்குத் தொடர்ந்தது.

    குல்புஷண் ஜாதவ்


    அந்த வழக்கில், 2017-ம் ஆண்டு மே 9-ம் தேதி ஜாதவ்வுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், நெதர்லாந்திலுள்ள சர்வதேச நீதிமன்றம் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கியது.

    ”குல்புஷன் ஜாதவ்வுக்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் நீதிமன்றம் மறுபரிசீலனை செய்யவேண்டும். இந்த வழக்கை மறுவிசாரணை செய்யவேண்டும். பாகிஸ்தான் அரசு, ஜாதவ்வை தொடர்பு கொள்வதற்கான இந்திய அரசின் உரிமையை மறுத்துள்ளது. ஜாதவ்வுக்கு உரிய சட்ட உதவிகளை வழங்கவில்லை. வியன்னா மாநாட்டு ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளது’ என்று தீர்ப்பளித்தனர்.

    ராணுவ நீதிமன்றம் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், ஜாதவை விடுதலை செய்து இந்தியாவுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.



    சர்வதேச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “குல்புஷன் ஜாதவை விடுவித்து இந்தியாவுக்கு அனுப்ப கூடாது என்ற சர்வதேச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். பாகிஸ்தான் மக்களுக்கு எதிராக அவர் குற்றங்களை செய்துள்ளார். பாகிஸ்தான் இதனை சட்ட ரீதியாக அனுகும்” என்று ட்வீட் செய்துள்ளார்.

    Published by:Sankar
    First published:

    Tags: Imran khan, Kulbhushan Jadhav

    அடுத்த செய்தி