இன்றைய உலகில் 10இல் இரண்டு நபர்களாவது ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்துகின்றனர். வெறுமனே நேரம் பார்ப்பதற்கு மட்டுமே வாட்ச் என்ற காலம் மாறிப் போய், உங்கள் உடல் நலன் குறித்து கணக்கெடுத்து, உங்கள் மீது அக்கறை கொள்ளும் இன்றியமையாத ஒருவராக மாறி இருக்கிறது ஸ்மார்ட் வாட்ச்.
இதில் செல்போன் அழைப்புகளை எடுத்து பேசலாம், மியூசிக் கேட்கலாம், சாலைகளில் செல்லும்போது மேப் பார்த்துக் கொள்ளலாம். ஸ்மார்ட் வாட்ச் கட்டியிருப்பவரின் இதய துடிப்பு, உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவும், தினமும் அவர் எவ்வளவு தூரம் நடக்கிறார் மற்றும் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து பல்வேறு தகவல்களை அது கணக்கெடுத்து வைத்துக் கொள்ளும் என்பது நம்மில் பலருக்கு தெரிந்த விஷயம் தான்.
அதேசமயம், உயிருக்கே ஆபத்து ஏற்படும் வகையில் சிக்கிய ஒருவரை ஸ்மார்ட் வாட்ச் காப்பாற்றி இருக்கிறது என்பதுதான் ஹைலைட். அமெரிக்காவில் எலெக்ட்ரிக் பைக்கில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி சரிந்தார். இந்நிலையில், அவர் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதையும் படியுங்கள் : 13 மாத குழந்தையுடன் வந்து வானிலை குறித்த தகவல்களை வழங்கிய ஆராய்ச்சியாளர்!
அவர் மயங்கி விழுந்தது குறித்து தகவல் கொடுத்தது ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் ஆகும். ஓனரின் உடலில் பல்ஸ் குறைந்து வருவதை கண்டறிந்த அந்த வாட்ச், தானாகவே 911 என்ற எமர்ஜென்சி எண்ணுக்கு டயல் செய்து தகவலை சேர்த்துவிட்டது. இதையடுத்து, போலீஸார் விரைந்து வந்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஸ்மார்ட் வாட்ச்-கள் அவர்களது உரிமையாளர்களின் உயிரை காப்பாற்றியிருக்கும் சம்பவம் இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பும் இதேபோல நடந்துள்ளது.
Apple Watch saves man's life after hard fall from an electric bike https://t.co/eRmK74GTcy
— AppleInsider (@appleinsider)
February 2, 2022
கடந்த ஆண்டு சிங்கப்பூரில் முகம்மது பிட்ரி என்பவர், சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது லாரி மோதிவிட்டது. மயங்கிய நிலையில் அவர் சரிந்து விட்டார். ஆனால், இதை யாரும் பார்க்காத நிலையில், அவர் கையில் கட்டியிருந்த ஸ்மார்ட் வாட்ச் தான், அவரது உயிரை காப்பாற்றியது. அவரது உடம்பில் பல்ஸ் குறைவது குறித்து அது கணக்கெடுத்ததும், ‘எமர்ஜென்ஸி’ என்று ஆடோமேடிக் முறையில் போலீஸாருக்கு மெசேஜ் அனுப்பி விட்டது. இது மட்டுமல்ல, அந்த மெசேஜ் உடன் சேர்ந்து, மிக சரியான லொகேஷனும் அனுப்பி இருந்தது அந்த வாட்ச்.
இதையும் படியுங்கள் : பெரிய மார்பகத்தால் இளம்பெண் அவதி... சிறிதாக்கும் சிகிச்சைக்கு மக்களிடம் நிதி உதவி கோரிக்கை
விலை உயர்ந்த பைக், விலை உயர்ந்த செல்போன் உள்ளிட்ட, நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் ஆடம்பரத்தின் அடையாளமாக இருக்கின்றன. குறிப்பாக, ஸ்மார்ட் வாட்ச்களுக்கு அதில் முக்கிய பங்கு உண்டு. ஆனால், வெறுமனே ஆடம்பரம், பல வசதிகள் கொண்டது என்பதோடு மட்டுமல்லாமல், உயிர்களை காக்கும் அளவுக்கு டெக்னாலஜி கொண்டதாக அவை இருக்கின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.