ஹோம் /நியூஸ் /உலகம் /

'இனி சீனா வேண்டாம் சாமி..' ஐபோன் தொழிற்சாலைகளை வேறு நாடுகளுக்கு மாற்ற ஆப்பிள் திட்டம்!

'இனி சீனா வேண்டாம் சாமி..' ஐபோன் தொழிற்சாலைகளை வேறு நாடுகளுக்கு மாற்ற ஆப்பிள் திட்டம்!

ஆப்பிள் ஐபோன்கள்

ஆப்பிள் ஐபோன்கள்

சீனாவில் இருந்து ஐபோன்கள் தயாரிப்பு தொழிற்சாலைகளை வேறு நாடுகளுக்கு மாற்ற ஆப்பிள் நிறுவனம் தீவிரமாக திட்டம் தீட்டி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, IndiaWashingtonWashington

சீனாவில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக அங்கிருந்து ஐபோன் உற்பத்தி தொழிற்சாலைகளை வேறு நாடுகளுக்கு மாற்றிக்கொள்ள ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. உலகின் முன்னணி தொலைப்பேசி நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், லேப்டாப்கள் மற்றும் அந்நிறுவனத்தின் எலக்ட்ரானிக் பிராண்டுகள் அனைத்து டாப் கிளாஸ் தரத்தில் இருப்பதாகக் கருதப்படுபவை.

குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் போட்டிப் போட்டு வாங்குகின்றனர். இந்த ஐபோன்களை பாக்ஸ்கான் என்ற தொழிற்சாலை தயாரித்து விற்று வருகிறது. உலகின் மிகப் பெரிய பாக்ஸ்கான் ஐபோன் உற்பத்தி தொழிற்சாலை சீனாவின் செங்ஷோ என்ற நகரில் உள்ளது. சுமார் 3 லட்சம் பேர் வேலை செய்யும் இந்த தொழிற்சாலையில் ஆப்பிள் நிறுவனத்தின் 85 சதவீத ஐபோன்கள் ஒரு கட்டத்தில் தயாரிக்கப்பட்டன. எனவே, அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான உற்பத்தி மையமாக சீனா திகழ்கிறது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் தலைதூக்கியுள்ள நிலையில் இது ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரும் பாதிப்பை தந்துள்ளது.சீனாவில் அந்நாட்டு அரசு ஜிரோ கோவிட் பாலிசியை கடைப்பிடிக்கிறது. அதன்படி, ஒன்று, இரண்டு பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டாலும், அந்நாட்டு அரசு ஒட்டுமொத்த நகரத்திற்கே லாக்டவுன் அறிவித்து, அனைவரையும் பரிசோதனை செய்து வருகிறது.

இரண்டு ஆண்டுகளாகு மேலாகவே இந்த கடுமையான நடைமுறையை சீனா கடைப்பிடித்து வருவது, அந்நாட்டின் தொழில் மற்றும் உற்பத்தி துறையையும் பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. இதன் தாக்கமாகத் தான் சீனாவில் இருந்து வெளியேறும் திட்டத்தை ஆப்பிள் நிறுவனம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. சீனாவின் இந்த கட்டுப்பாடுகளால் ஆப்பிளின் விநியோக சங்கிலி கடும் பாதிப்பை கண்டுள்ளது. தற்போது, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்கள் பலரும் ஷாப்பிங் செய்ய ஆர்வம் காட்டும் நிலையில், ஐபோன் ப்ரோ மாடல் போன்கள் டெலிவரிக்களுக்கு தாமதமாகும் என ஆப்பிள் நிறுவனமே அறிக்கை வெளியிடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எங்கே போனாலும் இந்தியாவையும் என்னுடன் அழைத்துச் செல்வேன் - கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை!

சீனாவின் செங்ஷோ தொழிற்சாலையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளே இதற்கு பிரதான காரணம். இந்நிலையில், சீனாவின் செயல்களால் அந்நாட்டில் இருந்து ஐபோன்கள் தயாரிப்பை வேறு நாடுகளுக்கு மாற்ற ஆப்பிள் நிறுவனம் திட்டம் வகுத்து வகுகிறது. குறிப்பாக, இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகளில் தயாரிப்பு ஹப்களை உருவாக்க ஆப்பிள் முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

First published:

Tags: Apple, Apple iphone, China, IPhone