கோவிட் காலத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்யும் பழக்கத்தை பெரும்பாலான நிறுவனங்கள் அமல்படுத்தியுள்ள நிலையில், கோவிட் பரவல் தற்போது குறைந்து வருவதால் சில நிறுவனங்கள் தனது ஊழியர்களை அலுவலகத்தில் வந்து பணியாற்ற அழைப்பு விடுத்து வருகின்றன.
உலகின் முன்னணி டெக் நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தற்போது அதன் ஊழியர்களை மூன்று நாள்கள் மட்டும் அலுவலகத்தில் இருந்து வேலை பார்க்க அழைப்பு விடுத்துள்ளது. நிறுவனத்தின் இந்த உத்தரவுக்கு பல ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் முக்கிய நகர்வாக, ஆப்பிள் நிறுவனத்தின் மெசின் லெர்னிங் பிரிவு இயக்குனர் இயான் குட்பெல்லோ நிறுவனத்தின் இந்த உத்தரவுக்கு உடன்படாமல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் தனது ஊழியர்களை திரும்ப அழைக்கும் முடிவு என்னை நிறுவனத்தில் இருந்து வெளியேற்றியுள்ளதாகக் கூறிய இயான், வளைந்து கொடுக்கும் கொள்கைகளே எனது அணிக்கு சிறப்பான பலன்களை தரும் எனக் கூறியுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தில் 2019ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வரும் குட்பெல்லோ மெசின் லெர்னிங் துறையில் உலகின் முன்னணி நபராகக் கருதப்படுகிறார்.
அமெரிக்காவின் முன்னணி நாளிதழான பார்சூன், ஆப்பிள் நிறுவன ஊழியர்களிடம் ரகசிய சர்வே ஒன்று கடந்த மாதம் நடத்தியது. இதில், 67 சதவீத ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணி புரிய விரும்பவில்லை என தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி வாரம் ஒரு முறை அலுவலகம் வரச் சொன்ன ஆப்பிள், மே 23ஆம் தேதி முதல் வாரத்திற்கு மூன்று நாள்கள் அலுவலகம் வர கோரியுள்ளது.
இதையும் படிங்க:
தொடங்கியது அமேசான் கோடைகால விற்பனை! மிஸ் பண்ணக் கூடாத சூப்பர் சலுகைகள்..
ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்க வேண்டும் என முடிவில் விடாப்பிடியாக உள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.