ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ டிம் குக்கின் இந்த ஆண்டு ஊதியம் எவ்வளவு தெரியுமா?

டிம் குக்

ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ டிம் குக் இந்த ஆண்டு ஊதியம் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.

  • Share this:
    உலக அளவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் அதிக ஊதியம் பெரும் நபர்களாக இருந்துவருகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்துவருகிறார். அவர், 2015-2020-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் 80,000 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றுள்ளார். தற்போது, 10 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓவாக இருக்கும் டிம் குக்கின் இந்த ஆண்டு வருமானம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிற்கு இந்த ஆண்டு ஊதியமாக 750 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 5,518 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. ஸ்டீவ் ஜாப் மறைவிற்குப் பின்னர் 2011-ம் ஆண்டு ஆப்பின் சி.இ.ஓ.வாக டிம் குக் பொறுப்பேற்றார். 10 ஆண்டுகள் இவர் இந்தப் பணியில் இருப்பார் என ஒப்பந்தம் போடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டிலும் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு மதிப்பிற்கேற்ப இவருக்கு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அந்த வகையில் ஒப்பந்தத்தின் கடைசி ஆண்டான 2021-ல் இவருக்கு 750 மில்லியன் டாலர் ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இவர் ஆப்பிள் சி.இ.ஓ.வாக பொறுப்பேற்ற இந்த 10 ஆண்டுகளில் அந்த நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 1,200 மடங்கு அதிகரித்து, 2 டிரில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்தையும் தொட்டது குறிப்பிடத்தக்கது.
    Published by:Karthick S
    First published: