ஹோம் /நியூஸ் /உலகம் /

ஐஒஎஸ் ஆப் உருவாக்கிய 9 வயது இந்திய வம்சாவளி சிறுமியை பாராட்டிய ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்!

ஐஒஎஸ் ஆப் உருவாக்கிய 9 வயது இந்திய வம்சாவளி சிறுமியை பாராட்டிய ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்!

9 வயது சிறுமியை பாராட்டிய டிம் குக்

9 வயது சிறுமியை பாராட்டிய டிம் குக்

இளைய வயது ஐஒஎஸ் டெவலப்பரான இந்திய சிறுமியை ”ஹனாஸ்” என்ற ஐஒஎஸ் உருவாக்கி இளம் வயதில் சாதனை படைத்து டிம் குக்- விடம் பாராட்டையும் பெற்றுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • internation, IndiaDubaiDubaiDubai

  ஆப்பிள் ஐபோன்களில் பயன்படுத்தப்படும் ஐஒஎஸ் ஆப்யை உருவாக்கிய 9 வயது இந்தியச் சிறுமியை ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் பாராட்டியுள்ளார்.

  ஸ்மார்ட் போன்களில் ஆன்ராய்டு மற்றும் ஐஒஎஸ் என்று மொபைல் இயக்க முறை உண்டு. அதில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் ஐஒஎஸ் இயக்க முறையாக உள்ளது. ஐஒஎஸ் இயக்க முறைக்கு என்று தனியாக ஆப்கள் உருவாக்கப்படும். அப்படி ஒரு ஐஒஎஸ் ஆப்யை துபாயில் உள்ள 9 வயது இந்தியச் சிறுமி உருவாக்கியுள்ளார்.

  ஹனா முஹம்மது ரஃபீக் என்ற சிறுமி தனது 8 வயதில் ”ஹனாஸ்” என்ற கதைகளைப் பதிவுசெய்யப் பெற்றோருக்கு உதவும் கதைசொல்லி செயலியை உருவாக்கியுள்ளார். மேலும் அந்த செயலியின் தகவலுடன் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் -க்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். மின்னஞ்சலைப் படித்த டிம் குக் அந்த சிறுமியைப் பாராட்டி வாழ்த்து செய்தியை அனுப்பியுள்ளார். இதனால் அந்த சிறுமி மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

  தான் ஒரு இளைய வயது ஐஒஎஸ் டெவலப்பர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த சிறுமிக்கு, "இவ்வளவு இளம் வயதிலேயே உங்களை  ஈர்க்கக்கூடிய சாதனைகள் அனைத்திற்கும் வாழ்த்துக்கள். இதைத் தொடர்ந்து செய்யுங்கள், எதிர்காலத்தில் நீங்கள் அற்புதமான விஷயங்களைச் செய்வீர்கள்." என்று டிம் குக் பாராட்டியுள்ளார்.

  Also Read : உலக வரலாற்றில் முதல் முறையாக சிம்பன்சிகளைக் கடத்தி பணம் கேட்கும் கடத்தல்காரர்கள் - காங்கோவில் பரபரப்பு!

  இந்த செயலியை உருவாக்க ஹனாவுக்கு ஒரு ஆவணப்படம் பார்த்து ஊக்கம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும் எந்த வித மூன்றாம் நபர் கோடிங்களையும் பயன்படுத்தாமல் தன்னுடைய சொந்த முயற்சியில் செய்ததாக கூறியுள்ளார். இந்த செயலியை உருவாக்க 10,000 வரிகளைக் கொண்ட கோடிங்கை அவர் எழுதியுள்ளார்.

  இந்த செயலி மூலம் பெற்றோர்கள் கதைகளைச் சொல்லிப் பதிவு செய்து வைத்துக் கொண்டு இரவில் குழந்தைகள் தூங்கும் போது போட்டுக் கேட்க வைக்கலாம்.

  Published by:Janvi
  First published:

  Tags: Apple IOS, Apps