அமெரிக்க நாடாளுமன்றத்தின் சிறுபான்மை பெண் உறுப்பினர்கள் குறித்து இனவெறி சொற்களால் விமர்சித்த ட்ரம்ப், அந்த நான்கு பெண் உறுப்பினர்களும் அமெரிக்காவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தற்போது கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முதன்முறையாக பதவியேற்ற நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் நால்வரை இனவெறி நிறைந்த சொற்களால் விமர்சித்தார் ட்ரம்ப். இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்த நான்கு பெண் உறுப்பினர்களும் தொடர்ந்து ட்ரம்ப் ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்து வருபவர்கள். சிறுபான்மை மக்களான இவர்கள் நால்வரையும் அவரவர் நாடுகளுக்கு திரும்பிச் செல்லுமாறும் அதன் முன்னர் அமெரிக்கா முன்னர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கருப்பு அமெரிக்கர், அகதிகள் என இருந்தாலும் அமெரிக்காவில் வாழ்ந்து உயர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆகும் அளவுக்கு உயர்ந்த இப்பெண்களுக்கு அமெரிக்காவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் ஆதரவு அதிகரித்து உள்ளது.
முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா, “நம் நாட்டினுள் இருக்கும் வேற்றுமைகள்தான் நம்மை மிகச்சிறந்த நாடாக முன் நிறுத்துகிறது. அகதி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அது நமது பெருமை. இன்றைய அதிபரின் கொள்கைகள் நமக்கு கெட்ட கனவுகளாக அமைந்து வருகிறது” என ட்ரம்ப்பை விமர்சித்துள்ளார்.
மேலும் பார்க்க: ”இது உங்களுடைய அமெரிக்கா இல்லை... நமது அமெரிக்கா” ட்ரம்ப்-க்கு மிச்சேல் ஒபாமா பதிலடி இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.