முகப்பு /செய்தி /உலகம் / நீண்ட இழுபறிக்கு பின் மலோசியாவின் பிரதமரானார் அன்வர் இப்ராஹிம்!

நீண்ட இழுபறிக்கு பின் மலோசியாவின் பிரதமரானார் அன்வர் இப்ராஹிம்!

அன்வர் இப்ராஹிம்

அன்வர் இப்ராஹிம்

25 ஆண்டுகள் போராட்டத்துக்குப்பின் அன்வர் இப்ராஹிமுக்கு பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

  • Last Updated :
  • intern, IndiaMalaysiaMalaysia

நீண்ட இழுபறிக்குப் பின்னர் மலேசியாவின் பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவியேற்றுக் கொண்டார்.

மலேசியாவில் 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் கடந்த வாரம் நடந்தது. தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கோ அல்லது அரசியல் கூட்டணிக்கோ பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஆளும் கட்சியை தீர்மானிப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான பகாதான் ஹரபன் கட்சி கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைக்க முன்வந்தது. இதனை ஏற்றுக் கொண்ட மலேசிய மன்னர் அப்துல்லா, அன்வர் இப்ராஹிமை பிரதமராக பதவியேற்றுக்கொள்ள அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து மன்னர் சுல்தான் அப்துல்லா,  அன்வர் இப்ராஹிம்மிற்கு பிரதமராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மாணவர் தலைவராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய, அன்வர் இப்ராஹிம் மலேசியாவில் முஸ்லிம் இளைஞர் அமைப்பைத் தொடங்கினார். 1971ம் ஆண்டு மலேசியாவில் கிராமப்புற வறுமை மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு எதிராக இப்ராஹிம பெரியஅளவில் போராட்டத்தை நடத்தினார்.

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நடைமுறைக்கு வந்த கசையடி தண்டனை…

 இப்ராஹிமின் நடவடிக்கையால் ஈர்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் மாகாதிர் முகமது, அவரை ஐக்கிய மலேசிய தேசிய அமைப்பில் சேர்த்தார். அதன்பின்னர் நிதிஅமைச்சர், துணைப் பிரதமர் என இப்ராஹிம் பல உயர்ங்களை எட்டினார். இப்ராஹிமின் சீர்திருத்த நடவடிக்கைகள் பெரும் மலேசியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

top videos

    1998ம் ஆண்டு அன்வர் இப்ராஹம் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். 25 ஆண்டுகள் போராட்டத்துக்குப்பின் அன்வர் இப்ராஹிமுக்கு பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

    First published:

    Tags: Anwar ibrahim, Malaysia