கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் உலக நாடுகளில் பரவ ஆரம்பித்த கொரோனா எனும் கொடிய வைரஸ் 2 வருடங்கள் கடந்தும் நம்மை அச்சுறுத்தி வருகிறது. இதன் பல்வேறு பிறழ்வுகள் தோன்றி பல தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில், தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓமைக்ரான் வகை தொற்று உலகம் முழுவதும் பரவி மீண்டும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸை பெற மக்களுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது நமக்கு ஒரு நம்பிக்கையான விஷயம் என்னெவன்றால் தடுப்பூசிகள் தான். முதல் அலை பாதிப்பு தொடங்கியதில் இருந்து பல நாடுகள் போட்டிபோட்டு கொண்டு தடுப்பூசிக்கான ஆராய்ச்சியில் இறங்கின.
அவை பயன்பாட்டிற்கு வரும் நேரத்தில் இரண்டாம் அலை பாதிப்பு தொடங்கியது. இருப்பினும், ஆரம்பத்தில் இந்த தடுப்பூசிகள் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், உயிருக்கு ஆபத்தானதாக முடியலாம் எனவும் பல கருத்துக்கள் வெளிவந்தன. மேலும் தடுப்பூசிகளை எதிர்த்து பல நாடுகளில் ஒரு இயக்கமே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் மக்கள் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்த தொடங்கினர். இருப்பினும் தடுப்பூசிக்கு எதிராக சில இயக்கங்கள் இப்போதும் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில், அமெரிக்க ஆன்டி-வாக்ஸ் தலைவரான கிறிஸ்டோபர் கீ என்பவர் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நபர் தன்னை பின்தொடர்பவர்களிடம், கொரோனா பாதிப்பில் இருந்து மீள அவர்களின் சிறுநீரையே குடிக்கச் சொல்லி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
Also read:
விமான நிலையத்தின் தண்ணீர் சப்ளையை துண்டித்து ஆளும் கட்சி எம்.எல்.ஏவின் மகன் அடாவடி!
தி டெய்லி பீஸ்ட் என்ற பத்திரிகையில் வெளியான சமீபத்திய அறிக்கையின்படி, கீ தனது டெலிகிராம் கணக்கில் இந்த வார இறுதியில் வெளியிட்ட ஒரு வீடியோவில், "எங்களிடம் டன் கணக்கில் சிறுநீர் சிகிச்சை ஆராய்ச்சிகள் உள்ளன. உங்களில் பலருக்கு இது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றலாம். ஆனால் நண்பர்களே, கடவுள் நமக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்திருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார். இவர் ஏற்கனவே அத்துமீறல் தொடர்பான குற்றச்சாட்டில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும், அதன் பிறகு கீ அவர்களால் இந்த வீடியோ பகிரப்பட்டது என்றும் தி டெய்லி பீஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.
Also read:
Kumbalangi: நாட்டிலேயே முதல் சானிட்டரி நாப்கின் இல்லாத கிராமம் இது தான்!
தற்போது ஆன்டி வாக்ஸ் கோட்பாடுகளை நம்பும் அமெரிக்கர்கள் பலர் தடுப்பூசியை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக கொரோனா வைரஸால் இறப்பதைத் தேர்தெடுத்து வரும் இந்த நேரத்தில் தடுப்பூசி எதிர்ப்பாளர் கீ-யின் அறிக்கை வந்துள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் அவர் வெளியிட்ட வீடியோவில், கீ தனது வாக்ஸ் எதிர்ப்பு நம்பிக்கையைத் தொடர்ந்து பரப்பினார். அவர் கூறியதாவது, "இப்போது சிறுநீரைக் குடியுங்கள். தடுப்பூசி தான் நான் பார்த்தவற்றில் மிக மோசமான உயிரி ஆயுதம்" என்று கூறினார். கீ தனது சிறுநீரை தாமே குடிப்பதாக அதில் கூறியிருந்தார். இதுகுறித்து தி டெய்லி பீஸ்டிடம் பேசிய அவர், இதனை "சிறுநீர் சிகிச்சை" என்று அழைத்தார். மேலும், பாதுகாப்பான மற்றும் பயனுள்ள COVID-19 தடுப்பூசியை எடுத்துக் கொண்ட அனைத்து நபர்களையும் முட்டாள்கள் என்று சாடினார்.
Also read:
நோயாளிகளின் கல்லீரலில் நூதனமாக ஆட்டோகிராஃப் பொறித்த மருத்துவர் - அதிர்ச்சித் தகவல்கள்
கடந்த வாரம் QAnon மற்றும் தடுப்பூசி எதிர்ப்பு போட்காஸ்டராக இருந்த 61 வயதான டக் குஸ்மா என்பவர் கொரோனாவால் உயிரிழந்தார். வர்ஜீனியாவைச் சேர்ந்த இவர் நியூபோர்ட் நியூசில் பணியாற்றினார். இவர் ஒரு சதிக் கோட்பாடு மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்டு பின்னர் அதன் காரணமாக ஏற்பட்ட சிக்கல்களால் இறந்தார். அதன்பிறகு இந்த மாநாடு ஒரு சூப்பர் ஸ்பிரடராக மாறியது. பல ஆன்டி-வாக்ஸர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
Also read:
Corona | இந்தியாவில் தடாலடியாக உயர்ந்த தினசரி கொரோனா பாதிப்பு
சமீபத்தில், செர்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் ஒரு ஆன்டி-வாக்ஸர் என்ற சிக்கலில் சிக்கினார். இவர் கோவிட்-19 தடுப்பூசியை எடுத்துக் கொள்ளாததால் ஜோகோவிச்சிற்கு ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு செல்ல ஆஸ்திரேலியாவால் விசா மறுக்கப்பட்டது. கடந்த திங்களன்று, ஒரு ஆஸ்திரேலிய நீதிபதி ஜோகோவிச்சின் விசாவை மீட்டெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.