முகப்பு /செய்தி /உலகம் / அண்டார்ட்டிக்காவில் வரலாறு காணாத வெப்பம்...! பனிப்பாறைகள் உருக வாய்ப்பு

அண்டார்ட்டிக்காவில் வரலாறு காணாத வெப்பம்...! பனிப்பாறைகள் உருக வாய்ப்பு

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

அர்ஜென்டினாவின் ஆராய்ச்சி நிலையம் தனது வெப்பமானியில் அண்டார்டிகாவின் அதிகபட்ச வெப்பமான வெப்பநிலையாக 18.3°C யை பதிவு செய்துள்ளது. இது முந்தைய வெப்பமான வெப்பநிலை பதிவை விட 0.8°C அதிகமாக பதிவாகியுள்ளது. 

மார்ச் 2015-ம் ஆண்டு, கண்டத்தின் தீபகற்பத்தின் வடக்கு முனையில் உள்ள எஸ்பெரான்சாவில் எடுக்கப்பட்ட அளவின்படி அண்டார்டிகாவின் முந்தைய அதிகபட்ச வெப்பநிலையாக 17.5°C பதிவாகியது.

1961-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அர்ஜென்டினாவின் வானிலை ஆய்வு நிறுவனம் வெள்ளிக்கிழமை தனது  ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை பதிவிட்டுள்ளது.

தென் அமெரிக்காவை நோக்கி செல்லும் அண்டார்டிகாவின் தீபகற்ப பகுதி பூமியின் மிக விரைவான எச்சரிக்கை இடங்களில் ஒன்றாகும்.  உலக வானிலை அமைப்பின் தகவலின்படி, இது கடந்த 50 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3°C அதிகமாக வெப்பமடைந்திருக்கிறது.

இதனால் கிட்டத்தட்ட அனைத்து பிராந்தியத்தின் பனிப்பாறைகளும் உருகும் நிலை கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

முந்தைய பதிவுகளில் இருந்து  வெறும் ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், தற்போது பதிவாகியுள்ள வெப்பமான வெப்பநிலை கடந்த ஐந்து ஆண்டுகளை விட ஒரு டிகிரி செல்சியஸ் மட்டுமே அதிகமாக பதிவாகியுள்ளது.

இந்த அதிகபட்சமான வெப்பநிலை பதிவு சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதோடு அங்கு நிகழ்ந்துகொண்டிருக்கும் வெப்பமயமாதலின் அடையாளத்தை குறிக்கிறது. குறிப்பாக இது உலக சராசரி அளவை விட மிக வேகமாக உள்ளது.

இப்பகுதியில் நிலவும் அதிக வெப்பநிலை மலைச் சரிவுகளில் நகரும் வலுவான வடமேற்கு காற்றுடன் ஒத்துப்போகிறது.  இது சமீபத்திய நாட்களில் எஸ்பெரான்சாவைச் சுற்றியுள்ள வானிலை வடிவங்களின் அம்சமாகும்.

இப்பகுதியில் சிக்கலான வானிலை நிகழ்வுகள் இருந்தன. ஆனால், எஸ்பெரான்சா பதிவு என்பது வளிமண்டலத்தில் பசுமை இல்லா வாயுக்களின் உயர்வால் ஏற்படும் இயற்கை மாறுபாடு மற்றும் பின்னணி வெப்பமயமாதல் ஆகியவற்றின் கலவையாக இருக்கலாம் என்பது சில வானிலை ஆர்வலர்கள் முன்வைக்கும் தகவல்.

புதிதாக பதிவாகியுள்ள இந்த வெப்பநிலை பதிவு ஆச்சரியமாக இருந்தாலும் அது எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. எஸ்பெரான்சாவில் பதிவாகியுள்ள வெப்பநிலை பதிவு முழு கண்டத்திலும் மிக நீண்ட காலமாக நீடித்து கொண்டிருக்கும் ஒன்றாகும். வெப்பமயமாதலின் சிறிய  அதிகரிப்பு கூட பனியை உருக வைக்கும் ஆற்றலில் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இதன் விளைவுகளாக தீபகற்பத்தில் உள்ள பனிக்கட்டிகள் மற்றும் பனிப் பாறைகள்  இடிந்து விழுகின்றன.

உருகும் நீர், பனிப்பாறைகளில் உள்ள விரிசல்கள் வழியாக அதன் வழியில் செயல்பட முடியும். பனிப்பாறைகள் ஏற்கனவே கடலில் மிதப்பதால், அவற்றின் சரிவு கடல் மட்டங்களை உயர்த்துவதற்கு நேரடியாக பங்களிக்காது.

இந்த வெப்பமான வெப்பநிலை பதிவு ஒரு நிலையத்திலிருந்து மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதால், இது வேறு இடங்களிலிருந்து எவ்வளவு பதிவாகிறது என்பதற்கான ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் கிரகம் வெப்பமடைகையில் நாம் அதிக சூடான பதிவுகளையும் குறைவான குளிர் பதிவுகளையும் பெறுகிறோம் என்பதற்கு அதிக சான்று என்று சிஸ்ரோவின் முன்னணி கடல் சார்வியலாளர் டாக்டர் ஸ்டீவ் ரின்தௌல் தகவல் தெரிவித்துள்ளார்.

1983 -ம் ஆண்டு அண்டார்டிகாவின் மிகக் குறைந்த வெப்பநிலையாக மைனஸ் 89.2°C ரஷ்ய வோஸ்டாக் நிலையத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Antarctica