• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • கொரோனாவால் நடுக்கடலில் தவித்த சொகுசுக்கப்பல் ஃப்ளோரிடா துறைமுகம் வந்தடைந்தது!

கொரோனாவால் நடுக்கடலில் தவித்த சொகுசுக்கப்பல் ஃப்ளோரிடா துறைமுகம் வந்தடைந்தது!

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • Share this:
    கொரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகளுடன் நடுக்கடலில் தவித்து வந்த கோரல் பிரின்ஸஸ் சொகுசுக்கப்பல் ஃப்ளோரிடா துறைமுகத்தை வந்தடைந்தது.

    சிலியில் மார்ச் 5 ஆம் தேதி பயணத்தைத் தொடங்கிய கோரல் பிரின்ஸஸ் மார்ச் 19 ஆம் தேதி அர்ஜென்டினாவில் பயணத்தை நிறைவு செய்யவிருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பால் சொகுசுக்கப்பல்களுக்கு பல நாடுகள் தடை விதித்த நிலையில் 1020 பயணிகள், 878 பணியாளர்களுடன் தவித்து வந்தது கோரல் பிரின்ஸஸ்.

    Also read... தனிமையாக உணர்கிறீர்களா? ஒரு கால் பண்ணுங்க சரியாயிடும்...!

    கடந்த வியாழனன்று கப்பலில் இருந்த 7 பயணிகளுக்கும், 5 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து ஃப்ளோரிடா துறைமுகத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கப்பல் துறைமுகத்திற்கு வந்தது.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: