இலங்கையில் எட்டாவதாக குண்டு வெடிப்பு! ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு

அதனைத் தொடரந்து மதியம் 2 மணி அளவில், இலங்கையின் டெகிவாலா உயிரியல் பூங்கா அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

news18
Updated: April 21, 2019, 3:16 PM IST
இலங்கையில் எட்டாவதாக குண்டு வெடிப்பு! ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு
இலங்கை
news18
Updated: April 21, 2019, 3:16 PM IST
இலங்கையின் கொழும்பு பகுதியில் 8-வதாக குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அதனையடுத்து, மாலை ஆறு மணி முதல் காலை ஆறு மணி ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்று காலையில் தொடர்ச்சியாக 6 இடங்களில் குண்டுகள் வெடித்தது. அதனைத் தொடரந்து மதியம் 2 மணி அளவில், இலங்கையின் டெகிவாலா உயிரியல் பூங்கா அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால், இலங்கையில் ஒரு பெரிய அச்சம் நிலவுகிறது. நாடு முழுவதும் முக்கியமான பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் மீண்டும் 3 மணி அளவில் கொழும்பு தெமடகொட பகுதியில் இலங்கை வீட்டு வசதி வாரியம் அமைந்துள்ள பகுதியில் குண்டு வெடித்தது.


இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்த தகவல் குறித்து இதுவரையில் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை. தொடர்ச்சியான குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் இந்த குண்டு வெடிப்பில் 160 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Also see:


Loading...

First published: April 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...