உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவுக்கு எதிராக ஹேக்கர்கள் சைபர் போரை தொடங்கியுள்ளனர். ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சக தகவல்களை தாங்கள் கசியவிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் பதற்றம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. ரஷிய ஏவுகணைகள் உக்ரைனின் முக்கியமான இடங்களை நோக்கி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளன. ரஷ்யாவின் போர் விமானங்கள் உக்ரைனுக்குள் தாழ்வான உயரத்தில் பறந்து கொண்டிருக்கின்றன. இந்த இக்கட்டான சூழலை ‘மூன்றாம் உலகப் போர்’ என்றே அனைவரும் கூறுகிறார்கள்.
வான்வழி, கடல்வழி, தரைவழியாக நடத்தப்படும் தாக்குதலால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. தங்களை பாதுகாத்துக்கொள்ள உக்ரைன் தரப்பிலும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவின் இந்த படையெடுப்புக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் ஒருபகுதியாக Anonymous என்னும் ஹேக்கர்ஸ் குழு ரஷ்யாவுக்கு எதிராக சைபர் போரை அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் அரசு தொலைக்காட்சியான RT news, அரசு வலைதளங்களை இந்த ஹேக்கர்ஸ் குழு இணைய தாக்குதலை DDoS attack. நடத்தியுள்ளது. ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளமும் இந்த சைபர் தாக்குதலில் இருந்து தப்பவில்லை. மேலும், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக வலைதளத்தில் இருந்த தகவல்களை தாங்கள் கசியவிட்டுள்ளதாகவும் இந்த ஹேக்கர்ஸ் குழு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் வாழும் தமிழர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள
உதவி எண் : +91 9940256444 / +91 9600023645, 044-2851 5288
மின்னஞ்சல் : nrtchennai@tn.gov.in / nrtchennai@gmail.com
வலைதளம் :
https://nrtamils.tn.gov.in
Facebook :
https://www.facebook.com/nrtchennai1038
Twitter : @
tamiliansNRT
மத்திய வெளியுறவுத்துறை உதவி எண்கள்:
1800118797 (Toll free)
+91-11-23012113, +91-11-23014104, +91-11-23017905
மின்னஞ்சல்: situationroom@mea.gov.in
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.