உலகின் முன்னணி பணக்காரர்களின் ஒருவர் வாரன் பஃபெட். 91 வயதான வாரன் பஃபெட் பங்குச்சந்தையின் தந்தையாகக் கருதப்படுபவர். ஆண்டுதோறும் ஒருமுறை இவருடன் ஒருவேளை உணவு அருந்த ஏலம் நடைபெறுவது வழக்கம். இதற்கு பவர் லனச்(Power Lunch) என்று பெயர். இதில் கலந்துகொள்ள விரும்பும் நபர்கள் அதிக தொகை செலுத்தி ஏலத்தில் வெற்றி பெறுவார். இந்த தொகையை அமெரிக்காவின் சான் பிரான்ஸ்
கோவைச் சேர்ந்த தொண்டு அமைப்புக்கு வழங்கிவிடுவார் வாரன் பெஃபெட். இந்தாண்டுக்கான ஒரு வேளை உணவு 19 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.148 கோடி. இந்த ஏலத்தை எடுத்த நபர் தனது அடையாளத்தை வெளியிடவில்லை.
சான் பிரான்ஸ்சிஸ்கோவின் கிளைட் என்ற தொண்டு நிறுவனத்திற்கு இந்த ஏலத் தொகை வழங்கப்படுகிறது. ஆதரவற்றவர்கள், நலிவடைந்தவர்களின் வாழ்வுக்காக இந்த தொகை செலவிடப்படவுள்ளது.நலிந்த மக்களின் உணவு, இருப்பிடம், வேலைத் திறன் போன்றவற்றுக்கு இந்த ஏலத்தொகையை பயன்படுத்தவுள்ளனர்.
இந்தாண்டு ஏலத்தில் வெற்றி பெற்றவர் வாரன் பஃப்பெட்டுன் சேர்த்து 7 முன்னணி தொழிலதிபர்களுடன் உணவு அருந்தவுள்ளார். 2000ஆம் ஆண்டு முதல் இந்த ஏல நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தாண்டு தான் வாரன் பஃபெட் பங்கேற்கும் கடைசி உணவு ஏலமாகும். இதுவரை இல்லாத அளவிற்கு இந்தாண்டு 19 மில்லியன் டாலர் தொகைக்கு ஏலம் சென்று சாதனை படைத்துள்ளது. கடந்த ஏலம் 4.57 மில்லியன் டாலருக்கு சென்றது. இதுவரை நடைபெற்ற 21 ஏலங்களில் சுமார் 53.2 மில்லியன் டாலர் திரட்டியுள்ளார் வாரன் பஃபெட்.
இதையும் படிங்க:
நோபல் பரிசை ரூ.808 கோடிக்கு ஏலமிட்டு உக்ரைன் குழந்தைகளுக்கு உதவும் ரஷ்ய ஊடகவியாளர்
இந்தாண்டு ஏலம் குறித்து வாரன் பஃபெட் கூறுகையில், இது மகிழ்ச்சியை தருகிறது. இது போன்ற பரந்த குணம் கொண்ட மனிதர்களை உலகம் முழுவதும் கண்டுள்ளேன். பணத்தை நல்ல செயலுக்காக வழங்க வேண்டும் என்பதே இந்த மக்களின் பொதுவான குணம் என்றுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.