அளவில் சிறியதாக மாறும் மிருகங்கள்... அழிவை நோக்கி ஓர் இனம்..!

இயற்கை மற்றும் சுற்றுச்சூழலின் கட்டமைப்பு, திறன் மற்றும் சுழற்சியைப் பாதிக்கும் வகையில் மிருகங்கள் மற்றும் பறவை இனங்களின் உருவ அளவு குறைந்து வருகிறது.

Web Desk | news18
Updated: May 25, 2019, 2:01 PM IST
அளவில் சிறியதாக மாறும் மிருகங்கள்... அழிவை நோக்கி ஓர் இனம்..!
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: May 25, 2019, 2:01 PM IST
மிருகங்கள், பறவைகள் பல அளவில் சிறியதாகிக் கொண்டிருப்பது இயற்கையின் சமநிலையை பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது என்கிறது அறிவியல் ஆய்வு ஒன்று.

இங்கிலாந்தைச் சேர்ந்த சவுத்ஆம்ப்டன் பல்கலைக்கழகம் மேறுகொண்ட இயற்கை தொடர்பான ஆய்வில், “இயற்கை மற்றும் சுற்றுச்சூழலின் கட்டமைப்பு, திறன் மற்றும் சுழற்சியைப் பாதிக்கும் வகையில் மிருகங்கள் மற்றும் பறவை இனங்களின் உருவ அளவு குறைந்து வருகிறது. இதனால் சுற்றுச்சூழலியல் மற்றும் பரிணாம வளர்ச்சியின் ஸ்திரத்தன்மை சிதையும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள், “பூமியில் வாழும் உயிரினங்களில் பாலூட்டிகள் மற்றும் பறவைகளே மனிதனின் மோசமான கெடுதல் விளைவிக்கும் செயல்பாடுகளால் முதலாவதாகவும் அதிகப்படியாகவும் பாதிக்கப்படுகின்றன். அடுத்த நூறு ஆண்டுகளில் பாலூட்டி இனங்களின் உருவ அமைப்பு 25% அளவில் சுருங்கும். கடந்த 1,30,000 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களைவிட 14% இது அதிகம்” என்கின்றனர்.


மேலும் பார்க்க: 5,000 ஆண்டுகள் பழமையான பீரை கண்டுபிடித்த இஸ்ரேல் விஞ்ஞானிகள்!

First published: May 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...