HOME»NEWS»INTERNATIONAL»animals are freezing to death at this sanctuary in texas vin ghta
டெக்சாஸில் கடும் உறை பனி - சரணாலயத்தில் உறைந்த விலங்குகள்!
டெக்சாஸில் இதுவரை கடும் பனிப்பொழிவால் 21 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பல இடங்களில் மின்சாரம் திரும்பாமல் உள்ளதால் தொடர்ந்து மக்கள் சிரமத்தில் உள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெக்சாஸில் இதுவரை கடும் பனிப்பொழிவால் 21 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பல இடங்களில் மின்சாரம் திரும்பாமல் உள்ளதால் தொடர்ந்து மக்கள் சிரமத்தில் உள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணமான டெக்சாஸில் உறை பனி நிலவுகிறது. இதனால் அங்கு பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின் இழப்பை. மின் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மனிதர்களாவது எப்படியாவது சமாளித்து கொள்வர் ஆனால் விலங்குகள் நிலை என்னாவது...!
இந்த வார தொடக்கத்தில் பவர் கட் மாகாணத்தின் பெரும்பகுதியை இருளில் மூழ்கடித்த பிறகு, சான் அன்டோனியோ ப்ரைமரிலி பிரைமேட்ஸ் சரணாலயத்தில் (San Antonio Primarily Primates sanctuary) உள்ள விலங்குகள் கடுங்குளிரில் உறைந்து போயின. சில அப்பாவி உயிரினங்கள் இறந்தும் போயின. பலியான உயிரினங்களில் ஒரு சிம்பன்சி, பல குரங்குகள், சில லீமர்ஸ் மற்றும் எண்ணற்ற பறவைகள் இருந்தன. ப்ரைமரிலி ப்ரைமேட்ஸின் நிர்வாக இயக்குனர் ப்ரூக் சாவேஸ் சான் அன்டோனியோ, "எனது ஆபிஸ் இருட்டால் மூழ்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை, ஆனால் இப்போது கும்இருட்டில் எனது ஆபிஸ் மூழ்கியுள்ளது" என்று எக்ஸ்பிரஸ்-நியூஸிடம் கூறினார்.
இந்த மோசமான காலநிலை தணியும் வரை எத்தனை விலங்குகள் இறந்தன என்று சரியான கணக்கு சொல்வது உண்மையில் கடினம் என்று சாவேஸ் கூறினார். மேலும் வெள்ளிக்கிழமை வரை (நாளை) அதிக குளிர் இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சரணாலயம் எந்தெந்த விலங்குகளை காப்பாற்ற வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.
திங்கள்கிழமை அதிகாலை பவர் கட் ஆன பிறகு, சாவேஸ் மற்றும் அவரது 12 பேர் கொண்ட குழு ஒருசில நடவடிக்கைகளை எடுத்தது. அவர்கள் கிட்டத்தட்ட 400 விலங்குகளை சூடாக வைத்திருக்க ஜெனரேட்டர்கள், ஸ்பேஸ் ஹீட்டர்கள், புரோபேன் டாங்கிகள் மற்றும் போர்வைகளை சேகரிக்கத் தொடங்கினர் என்று சான் அன்டோனியோ எக்ஸ்பிரஸ்-நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் வெப்பநிலை மேலும் குறைந்துவருவதால், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் சில உயிரினங்கள் இறந்துகொண்டும் வருகின்றன. இது போன்ற ஒரு நிலையை நான் கனவிலும் கண்டதில்லை என்று சாவேஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார். இதுபோன்ற சூழ்நிலையில் எந்த விலங்குகளை நம் காப்பாற்றவேண்டும் எந்த விலங்கை காப்பாற்றினால் அதனால் இந்த கடும் குளிரில் இருந்து தன்னை ஓரளவிற்கு தற்காத்துக் கொள்ளும் என்பன போன்ற பல விஷயங்களை நாங்கள் யோசித்தோம். மீட்பு பணிகளுக்காக அணி திரட்டும் போது தான் எத்தனை விலங்குகள் உயிரிழந்து இருந்தன என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது என்றார்.
சரணாலயத்தில் இருக்கும் ஒருசில விலங்குகள் வெளியேற்றப்பட்டது. சில விலங்குகள் சான் அன்டோனியோ மிருகக்காட்சிசாலை மற்றும் ஓக்லஹோமா எல்லைக்கு அருகிலுள்ள ஒரு சரணாலயத்திற்குச் கொண்டு செல்லப்பட்டன. ஒருசில விலங்குகள் விலங்கு பிரியர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. எக்ஸ்பிரஸ்-நியூஸின் படி, இப்போது பல சிம்பன்சிகள் சரணாலயத்தில் இருக்கின்றது. அவைகளில் 33 சிம்பன்சிகளை இடமாற்றுவது கடினம் என்பதை அறிந்த பிறகு ப்ரைமரிலி ப்ரைமேட்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து நன்கொடைகளை கேட்டு வருகிறது.
பலரும் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இந்த கடும் குளிரினால் இழந்துள்ளனர். மழையை கூட ஓரளவுக்கு சமாளித்து விடலாம் ஆனால் இந்த குளிரை நிச்சயம் சமாளிக்க முடியாது என்று பலரும் கூறி வருகின்றனர். உணவு கூட இல்லாமல் பல லட்சம் மக்கள் துன்பப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. குளிரை சமாளிக்க பெரும்பாலான மக்கள் ஜெனரேட்டர்கள், கார்கள் முதற்கொண்டு தங்களது வாகனங்களை முழு நேரமும் இயக்கி அதிலிருந்து வரும் வெப்பத்தை கொண்டு குளிரை சமாளித்து வருகின்றனர். இதனால் கார்பன் மோனாக்சைடு என்ற விஷம் அதிகரித்து மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று CNN இணை KTRK-TV தெரிவித்துள்ளது.
டெக்சாஸில் இதுவரை கடும் பனிப்பொழிவால் 21 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பல இடங்களில் மின்சாரம் திரும்பாமல் உள்ளதால் தொடர்ந்து மக்கள் சிரமத்தில் உள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.