வாக்குறுதிகளை நிறைவேற்றாத மேயரை லாரியில் கட்டி இழுத்துச் சென்ற மக்கள்! - வைரலாகும் வீடியோ

வாக்குறுதிகளை நிறைவேற்றாத மேயரை லாரியில் கட்டி இழுத்துச் சென்ற மக்கள்! - வைரலாகும் வீடியோ
சிசிடிவி காட்சிகள்
  • News18
  • Last Updated: October 10, 2019, 2:52 PM IST
  • Share this:
தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மேயரை, அலுவலகத்தில் இருந்து இழுத்து வந்த மக்கள் அவரை லாரியில் கட்டி இழுத்துச் சென்றுள்ள சம்பவம் மெக்ஸிகோவில் நடந்துள்ளது.

மத்திய அமெரிக்க கண்ட நாடான மெக்ஸிகோ போதை மருந்து கடத்தலுக்கு உலகப்புகழ் பெற்றது. இந்த நாட்டில் உள்ள சியாபாஸ் மாகாணத்தில் இருக்கும் லாஸ் மார்கரிட்டாஸ் நகரத்தின் மேயராக இருப்பவர் ஜார்ஜ் லூயிஸ் எஸ்காண்டோன். தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி, அவர் மின்சாரம், குடிநீர், சாலை என்று எந்த வசதியும் செய்ய வில்லை என்று எஸ்காண்டானை பொதுமக்கள் தாக்கி லாரியில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

நேற்று முன் தினம் இரவு மேயரின் அலுவலகத்துக்குள் நுழைந்த கும்பல், அவரை வெளியே இழுந்து வந்து தாக்கியுள்ளது. பின்னர், மேயரின் கைகளை ஒரு டிரக்கில் கட்டி அவரை சாலையில் இழுத்துச் சென்றுள்ளனர். அதற்குப் பின்னால் கம்பு மற்றும் குச்சிகளுடன் பல கிராம மக்கள் ஓடுகின்றனர். இந்தச் சம்பத்தின் வீடியோ வைரலாக பரவி வருகின்றது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் பொதுமக்களிடமிருந்து மேயரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு லாஸ் மார்கரிட்டாஸில் உள்ள மத்திய சதுக்கத்துக்கு வந்த மேயர் , மக்கள் முன் சுமார் 8 மணி நேரம் பேசியுள்ளார். இந்தச் சம்பவத்தால் தான் பயந்துவிடவில்லை என்றும், நான்கு மாதத்துக்கு முன்னர் நடந்த ஒரு தனிப்பட்ட சம்பவத்துக்காகவே தற்போது தான் தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கவே, இதேபோல எஸ்காண்டோன் ஒருமுறை பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. போதை மருந்து கடத்தல் கும்பலின் தூண்டுதலால் மேயர் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Also See...

First published: October 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்