முகப்பு /செய்தி /உலகம் / அடுத்தடுத்து இறந்த குழந்தை சிசுக்கள்.. விஷ ஊசி செலுத்தியதாக செவிலியர் கைது

அடுத்தடுத்து இறந்த குழந்தை சிசுக்கள்.. விஷ ஊசி செலுத்தியதாக செவிலியர் கைது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கடந்த மார்ச் முதல் ஜூன் மாதங்களுக்கு இடையில் சுமார் 8 குழந்தைகள் ஆரோக்கியமாக பிறந்து சில நாட்களிலேயே இருந்துள்ளன.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

அர்ஜென்டினாவின் கோர்டோபா நகரத்தில் உள்ள செவிலியர் ஒருவர் மருத்துவமனையில் பிறந்த இரண்டு ஆரோக்கியமான குழந்தைகளின் இறப்புக்குக் காரணமாக இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸிலிருந்து வடமேற்கே 700 கிமீ தொலைவில் உள்ள கார்டோபாவில் பிறந்த குழந்தைகளின் மகப்பேறு மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனையில் பிறந்த 3 குழந்தைகளின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ரவுல் கார்ஸனின் உத்தரவின் பேரில் 27 வயதான பிரெண்டா அகுவேரோ வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

கடந்த மார்ச் முதல் ஜூன் மாதங்களுக்கு இடையில் சுமார் 8 குழந்தைகள் ஆரோக்கியமாக பிறந்து சில நாட்களிலேயே இறந்துள்ளன. இது குறித்து யாரும் வழக்கு பதிவு செய்யாமல் இருந்தனர்.

ஆனால் ஜூன் 6 ஆம் தேதி இறந்த குழந்தையின் பாட்டி புகார் அளித்த பிறகுதான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அதன் பின்னர் குழந்தைகள் இறந்த காரணம் குறித்து விசாரணை தொடங்கியது.

ஆன்லைன் லோன், ஆபாச படம் மூலம் மிரட்டி ரூ.500 கோடி மோசடி: பின்னணியில் சீன நபர்கள்

குழந்தைகள் பிறக்கும் போது ஆரோக்கியமாக இருந்தது. குழந்தைகளின் தாய்மார்களும் ஆரோக்கியமாக இருந்தனர். ஆனால் சிறிது நாளிலேயே குழந்தைகளின் உடம்பில் பொட்டாசியம் அளவு அதிகமாகி குழந்தைகளை உடல்நிலை பெரிதும் பாதித்துள்ளது.

5 குழந்தைகள் உடல் நிலை மிகவும் மோசமாகி சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். 3 குழந்தைகள் உடல் நலக்குறைவால் இறந்துள்ளது.

இந்த குழந்தைகளின் மரணங்கள் கொலையா, அலட்சியமா அல்லது முறைகேடா என்பதைத் தீர்மானிக்க விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கிற்காக இந்த மாதம் மட்டும் ஒன்பது பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதில் இப்போது கைது செய்யப்பட்ட செவிலியரும் ஒருவர்.

First published:

Tags: Arrest, Children death, Nurse