அரசியலுக்கு வரும் ’ஹாலிவுட் புயல்’ ஏஞ்சலினா ஜோலி?

ஏஞ்சலினா ஜோலி தற்போது ஐநா-வின் அகதிகள் பாதுகாப்பு அமைப்புத் தூதுவராகப் பணியாற்றி வருகிறார்.

Web Desk | news18
Updated: December 29, 2018, 7:15 PM IST
அரசியலுக்கு வரும் ’ஹாலிவுட் புயல்’ ஏஞ்சலினா ஜோலி?
ஏஞ்சலினா ஜோலி
Web Desk | news18
Updated: December 29, 2018, 7:15 PM IST
பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான ஏஞ்சலினா ஜோலி தனது அரசியல் ஆர்வம் குறித்துப் பேசியுள்ளார்.

ஹாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் ஏஞ்சலினா ஜோலி தனது சமூக நல செயல்களுக்காகப் பல உயரிய பதவிகளையும் பாராட்டுகளையும் பெற்று வருபவர். சமீபத்தில் பிபிசி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஏஞ்சலினா ஜோலி தனது அரசியல் பிரவேசம் குறித்துப் பேசினார்.

ஏஞ்சலினா ஜோலி பேசுகையில், “எனது அரசியல் ஆர்வம் குறித்துப் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆனால், இதே கேள்வியை 20 ஆண்டுகளுக்கு முன்னர் என்னிடம் கேட்டிருந்தால் நிச்சயமாக சிரித்திருப்பேன். தற்போது அப்படியில்லை. சர்வதேச அளவில் அக்கறை தேவைப்படும் மக்களுக்காக உழைத்து வருகிறேன்.

ஐநா-வின் அகதிகள் பாதுகாப்பு அமைப்பின் தூதராகப் பல நாடுகளுக்குப் பயணித்து மக்களைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறேன். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன்.ஆனால், அனைத்துப் பணிகளையும் எந்தவொரு பதவிப் பொறுப்பும் இல்லாமல் மக்கள் சேவையாக மட்டுமே செய்து வருகிறேன். பல நாட்டு அரசாங்கங்கள் உடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். ஏன், ராணுவங்கள் உடன் இணைந்தும் கூட பணியாற்றுகிறேன். அரசியல்வாதி ஆகும் தகுதி எனக்கு இருக்கிறதா எனத் தெரியாது. ஆனால், அரசியலில் நுழையும் ஆசை இல்லை எனக் கூறமாட்டேன். எனது வருகை மாற்றம் ஏற்படுத்துமானால் அந்த விஷயத்தைச் செய்வேன்” என்றார்.

ஐநா தூதுவராகப் பணியாற்றி வரும் நடிகை ஏஞ்சலினா ஜோலி வருகிற 2019-ம் ஆண்டு முதல் பிபிசி தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் குறித்தான ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார்.
Loading...
மேலும் பார்க்க: ஜெ. உடலை எம்ஃபார்மிங் செய்த சுதா சேஷையன் துணை வேந்தராக நியமனம்
First published: December 29, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...