ஹோம் /நியூஸ் /உலகம் /

ஜெர்மனியில் முதல்முறையாக 3 கட்சி இணைந்து ஆட்சி.. பதவி விலகும் ஏஞ்சலா மெர்கல்!

ஜெர்மனியில் முதல்முறையாக 3 கட்சி இணைந்து ஆட்சி.. பதவி விலகும் ஏஞ்சலா மெர்கல்!

Angela merkel

Angela merkel

1990 முதல் ஏஞ்சலா மெர்க்கெல் வெற்றி பெற்று வந்த தொகுதியில் கூட ஆளுங்கட்சி தோல்வி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஜெர்மனியில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சமூக ஜனநாயகவாதிகள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய அதிபரான ஏஞ்சலா மெர்க்கெலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் கட்சி குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

Bundestag என அழைக்கப்படும் ஜெர்மனி நாடாளுமன்றத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி நேற்று அங்கு வாக்குப்பதிவு நடைபெற்று உடனடியாக எண்ணப்பட்டு வருகின்றன.

299 தொகுதிகளில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் சமூக ஜனநாயகவாதிகள் கட்சி 25.9 தவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. ஏஞ்சலா மெர்க்கெலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் 24.1 சதவீத வாக்குகளைப் பெற்று குறைந்த வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமை கட்சி 14.8 சதவிகித வாக்குகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

ஏஞ்சலா மெர்க்கெலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் சார்பில் அதிபர் வேட்பாளராக களம் இறங்கிய அர்மின் லாஷெட், மற்ற கட்சிகளுடன் ஆலோசித்து ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

Also read: விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதில் குழப்பம்!

CDU கட்சியின் அதிபர் வேட்பாளர், அர்மின் லாஷெட் கூறுகையில், எங்கள் கட்சி ஆட்சியில் அமர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். ஜெர்மனியை நவீன நாடாக மாற்ற தற்போது கூட்டணி ஆட்சி தேவைப்படுகிறது என்றார்.

ஏஞ்சலா மெர்க்கெலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம், இரண்டாவது உலக போருக்கு பின்னர் தற்போதைய தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. 1990 முதல் ஏஞ்சலா மெர்க்கெல் வெற்றி பெற்ற நாடாளுமன்ற தொகுதி, தற்போது சமூக ஜனநாயகவாதிகள் கட்சியின் வசம் சென்றுள்ளது. அதிக சதவிகித வாக்குகளை பெற்றுள்ள சமூக ஜனநாயகவாதிகள் கட்சியின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also read: கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் காஸ்ட்லி பைக்குகளை குறிவைத்து திருட்டு!

சமூக ஜனநாயகவாதிகள் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz), தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என கூறியுள்ளார்

ஓலாஃப் ஸ்கோல்ஸ் கூறுகையில், சமூக ஜனநாயகவாதிகள் கட்சிக்கு பெரும்பான்மை மக்களின் ஆதரவு உள்ளது.  பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு மிகுந்த வலிமையான கட்சியாக வலம் வருவோம்.  எனினும் எந்த கட்சியும் பெரும்பான்மை வாக்குகளை பெற தவறவிட்டதால், மூன்று கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கப்படும். ஜெர்மனியில் மூன்று கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறை ஆகும்.

First published:

Tags: Germany