ஜெர்மனி பிரதமரை சந்தித்து உரையாடினார் டிரம்ப்

news18
Updated: July 11, 2018, 10:03 PM IST
ஜெர்மனி பிரதமரை சந்தித்து உரையாடினார் டிரம்ப்
டிரம்ப் மற்றும் ஏஞ்சல்லா மெர்கல்.
news18
Updated: July 11, 2018, 10:03 PM IST
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சல்லா மெர்கல்லை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து உரையாடினார். சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜெர்மனி பிரதமரை நேரடியாக குற்றம்  சாட்டியிருந்த நிலையில் இன்று இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பெல்ஜியம் நாட்டின் தலைநகர் புருஷெல்ஸ் நகரில் நாட்டோ (NATO) நாடுகள் உச்சிமாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் புருஷெல்ஸ் சென்றுள்ளனர். இந்நிலையில், இன்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சல்லா மெர்கல்லை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து உரையாடியுள்ளார். இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், இராணுவம் உள்ளிட்ட துறைகள் தொடர்பாக இருவரும் ஆலோசனை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, ரஷ்யாவில் இருந்து பைப்லைன் வழியாக சமையல் எரிவாயு இறக்குமதி செய்யும் விவகாரம் தொடர்பாக ஜெர்மனி அதிபர் ஏஞ்சல்லா மெர்க்கல்லை டிரம்ப் நேரடியாக குற்றம் சாட்டியிருந்தார். அதுமட்டுமல்லாமல் ராணுவத்துக்கு மிக அதிகமாக ஜெர்மனி செலவிடுவதாகவும் அவர் கூறியிருந்தார். டிரம்பின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஏஞ்சல்லா மெர்கல்லும் ஆவேசமாக பதிலளித்தார்.  “முன்னர் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்ததுபோல் தற்போது இல்லை” என டிரம்புக்கு பதிலடி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் இன்றைய சந்திப்பு நிகழ்ந்துள்ளது.  ஏஞ்சல்லா மெர்கலுடனான சந்திப்புக்குப் பிறகு பேட்டியளித்த டிரம்ப், ஜெர்மனியின் கூட்டாளியாக அமெரிக்கா எப்போது இருந்து வந்துள்ளதாக தெரிவித்தார்.
First published: July 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...