ஆன்லைன் காதலியைச் சந்திக்க கூகுள் மேப் மூலம் பாகிஸ்தான் சென்ற ஆந்திர இளைஞர் கைது!

பிரஷாந்த் தனது ஆன்லைன் காதலியான ஸ்வப்னிகாவை சந்திக்க கூகுள் மேப் உதவியுடன் சுவிட்சர்லாந்து செல்ல முயன்றுள்ளார்.

ஆன்லைன் காதலியைச் சந்திக்க கூகுள் மேப் மூலம் பாகிஸ்தான் சென்ற ஆந்திர இளைஞர் கைது!
மாதிரி படம்
  • Share this:
பாகிஸ்தானின் சோலிஸ்தானில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கைது செய்யப்பட்ட 2 இளைஞர்களில் ஒருவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவர் காணாமல் போனதாக  காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பிரசாந்த் வைந்தம், சரியான ஆவணங்கள் இல்லாமல் ராஜஸ்தான் வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானின் பாகவல்பூர் மாவட்டத்திற்கு அருகிலுள்ள பாலைவனத்தில் நவம்பர் 14-ம் தேதி அவர்கள் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டன.

பிரஷாந்த் தனது ஆன்லைன் மூலம் பழக்கமான காதலியைச் சந்திக்க சுவிட்சர்லாந்து செல்ல விரும்பினார். ஆனால் பாகிஸ்தானில் எப்படி நுழைந்தார் என்பதை கண்டுபிடிக்க போலீசார் முயன்று வருகின்றனர். பிரஷாந்த் தனது ஆன்லைன் காதலியான ஸ்வப்னிகாவைச் சந்திக்க கூகுள் மேப் உதவியுடன் சுவிட்சர்லாந்து செல்ல முயன்றுள்ளார். ஆனால் நடுவில் பாகிஸ்தானைக் கடக்கும் போது சட்டவிரோதமாக நுழைந்ததாக பாகிஸ்தான் ராணுவம் அவரைக் கைது செய்துள்ளது.


பிரஷாந்த் தனது பெற்றோருக்காகப் பேசி வெளியிட்ட வீடியோ செய்தி ஒன்று திங்கள்கிழமை பிற்பகுதியில் வைரலாகியது. அதில் தெலுங்கில் பேசிய பிரஷாந்த், ஒரு மாதத்திற்குள் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவேன் எனத் தான் நம்புவதாகப் பெற்றோரிடம் கூறி உள்ளார்.
First published: November 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்