இந்தோனேஷியாவில் உலகின் தொன்மையான 45,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியம் கண்டெடுப்பு..

இந்தோனேசிய குகை ஓவியம்

உலகின் மிக பழமையான குகை ஓவியத்தை இந்தோனேஷியாவில் அடையாளம் கண்டுள்ளனர் தொல்பொருள் ஆய்வறிஞர்கள்

 • Share this:
  உலகின் மிக பழமையான குகை ஓவியத்தை இந்தோனேஷியாவில் அடையாளம் கண்டுள்ளனர் தொல்பொருள் ஆய்வறிஞர்கள். இந்த ஓவியம் சுமார் 45,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும். இதை அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் வரைந்திருக்கலாம் எனவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

  இந்தோனேஷியாவில் உள்ள சுலோவெசி தீவில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆராய்ச்சி பணி தொடங்கப்பட்டு நடந்துள்ளது. அப்போது அங்கிருந்த குகைகளில்  இருந்த சுண்ணாம்பு கற்கள் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  இந்தோனேசிய குகை ஓவியம்


  அதனடிப்படையில் அங்கு பன்றியின் ஓவியம் வரையப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 136 x 54 சென்டி மீட்டரில் அந்த ஓவியம் இருந்துள்ளது. அதை தொடர்ந்து ஆராய்ச்சி செய்ததில் அந்த ஓவியம் 45000 ஆண்டுகளுக்கு முன்னர் வரைந்தது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மக்கள் இதை வரைந்திருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  Published by:Gunavathy
  First published: