முகப்பு /செய்தி /உலகம் / சர்வதேச முன்னணி ஐ.டி. நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இந்தியாவை சேர்ந்த ஆனந்த் ஈஸ்வரன் நியமனம்

சர்வதேச முன்னணி ஐ.டி. நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இந்தியாவை சேர்ந்த ஆனந்த் ஈஸ்வரன் நியமனம்

புதிய பொறுப்பு குறித்து ஈஸ்வரன் கூறுகையில், 'வீம் என்பது தனித்துவம் மிக்க நிறவனம். மார்க்கெட்டி வீம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மிகவும் திறமை மிக்க குழுவுடன் இணைவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சர்வதேச முன்னணி ஐ.டி. நிறுவனமான வீம்-ன் (veeam)தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவை சேர்ந்த ஆனந்த் ஈஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உலக அளவில் தலைசிறந்து விளங்கும் நிறுவனங்கள் சிலவற்றில், இந்தியர்கள் உச்சபட்ச தலைமை பொறுப்பை வகித்து வருகின்றனர். இது சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

கூகுள் ஆல்பாபெட் நிறுவனத்தின் சிஇஓவாக தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட சுந்தர் பிச்சை, மைக்ரோ சாஃப்டின் சத்யா நாதெள்ளா, ஐ.பி.எம்.-ன் அரவிந்த் கிருஷ்ணா, அடோப் இன்கார்ப்பின் சாந்தனு நாராயண், ட்விட்டரின் பராக் அகர்வால் ஆகியோர் குறிப்பிடத்தக்க சிஇஓக்களில் சிலர்.

இந்த வரிசையில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 46 வயதாகும் ஆனந்த் ஈஸ்வரன் இணைந்துள்ளார். அவர் தகவல் தொழில் நுட்ப நிறுவனமான வீம்-ன் தலைமை செயல் அதிகாரியாக இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பாக அவர் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் வர்த்தக பிரிவுகளின் தலைவராக இருந்து வந்தார்.

எச்.பி., Vignette, Fair Isaac உள்ளிட்ட நிறுவனங்களில் துணைத் தலைவராக இருந்த அனுபவம் ஆனந்த் ஈஸ்வரனுக்கு உண்டு. தற்போது வீமின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் வில்லியம் எச்.லார்கன்டுக்கு, நிர்வாக இயக்குனர்களின் தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

புதிய பொறுப்பு குறித்து ஈஸ்வரன் கூறுகையில், 'வீம் என்பது தனித்துவம் மிக்க நிறவனம். மார்க்கெட்டி வீம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மிகவும் திறமை மிக்க குழுவுடன் இணைவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : பாதுகாப்பு படையினரின் துணையோடு 20 ஆண்டுகளுக்கு பின் காஷ்மீரில் விவசாயம்

வில்லியம் லார்கண்ட் கூறுகையில், '4 லட்சம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக வீம் உள்ளது. தகவல் மேலாண்மை துறையில் சவால்கள் அதிகரித்துள்ளன. அதை எதிர்கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சிறப்பான சேவைகளை வழங்க வீம் தயாராகி வருகிறது. அதன் தலைமை செயல் அதிகாரி பொறுப்புக்கு ஆனந்த் பொருத்தமானவர். அவரது அனுபவங்கள், நிர்வாக திறன் வீம்-யை இன்னும் வளரச் செய்யும்.' என்றார்.

இதையும் படிங்க : பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் சந்து பெயரில் போலி கணக்கு: ப்ளூ டிக் வழங்கிய ட்விட்டர்

இதையும் படிங்க :  அரசு நிதியுதவிக்காக சொந்த சகோதரியை திருமணம் செய்த நபர்

First published:

Tags: NRI