முகப்பு /செய்தி /உலகம் / ஆகாய வெண்ணிலாவே தரைமீது வந்ததேனோ.. நிலவு வடிவில் அல்ட்ரா சொகுசு ரெசார்ட் - விண்வெளி அனுபவம் விரைவில் துபாயில்

ஆகாய வெண்ணிலாவே தரைமீது வந்ததேனோ.. நிலவு வடிவில் அல்ட்ரா சொகுசு ரெசார்ட் - விண்வெளி அனுபவம் விரைவில் துபாயில்

துபாயில் நிலவு வடிவில் அல்ட்ரா சொகுசு ரெசார்ட்

துபாயில் நிலவு வடிவில் அல்ட்ரா சொகுசு ரெசார்ட்

மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸ் என்ற கனடா கட்டிடக்கலை நிறுவனம் துபாயில் நிலவு வடிவில் அல்ட்ரா சொகுசு ரெசார்ட்டை விரைவில் கட்டவுள்ளனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • international, IndiaDubaiDubai

துபாயில் கனடா கட்டிடக்கலை நிறுவனம் நிலவு வடிவில் நிலவின் பரப்பளவு உள்ளது போலவே அல்ட்ரா சொகுசு ரெசார்ட்டை 735 அடி அளவில் விரைவில் கட்டப்படவுள்ளதாகக் கூறியுள்ளனர். மேலும் அதன் வடிவமும் வெளியாகியுள்ளது. பூமியிலேயே விண்வெளியில் இருப்பது போல் உணரும் அனுபவத்தைத் தரும் சுற்றுலாத் தலமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளனர்.

மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸ் என்ற கனடா கட்டிடக்கலை நிறுவனம் இதற்கான வடிவத்தை வடிவமைத்துள்ளனர். 735 அடி அளவில் 48 மாதங்களில் கட்டப்படவுள்ளது. "மூன் துபாய்" என்று குறிப்பிடப்படும் இந்த திட்டம் துபாயின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விருந்தோம்பல், பொழுதுபோக்கு இடங்கள், கல்வி, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் விண்வெளி சுற்றுலா என்று பல வகையில் மூன் துபாய், துபாய்க்கு வலுசேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துபாய் சொகுசுக்குப் பெயர் போன நாடாக உள்ளது. இந்த நிலையில் மூன் துபாய் ரெசார்ட் மேலும் அல்ட்ரா சொகுசாக மாற்றும், இதனால் சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரிக்கும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

அல்ட்ரா சொகுசு ரெசார்ட்டுக்கு வரும் மக்கள் அங்கு வர இருக்கும் ஸ்பா, இரவுநேர கேளிக்கை விடுதி, நிகழ்வு மையம், உலகளாவிய சந்திப்பு இடம், ஓய்வறை போன்றவற்றை அனுபவிக்கலாம். மேலும் அந்த நிறுவனம் அங்கு ஸ்கை வில்லாஸ் என்ற பெயரில் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்படவுள்ளது. சுமார் 144 வீடுகள் கட்டப்படும் என்றும் அதில் வீடு வாங்குபவர்களுக்கு மூன் ரெசார்ட் கிளப் -க்கு தனிப்பட்ட உறுப்பினர் உரிமம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அல்ட்ரா சொகுசு மூன் துபாய் கட்ட சுமார் 5 பில்லியன் பட்ஜெட் போடப்பட்டுள்ளது. இதனால் வருடத்திற்கு 1.8 பில்லியன் வரை வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : 30 ஆண்டுகளில் 11 லட்சம் கடல் ஆமைகள் சட்டவிரோதமாக கொலை.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மேலும் இதே போன்று உலகின் முக்கிய இடங்களான வட அமெரிக்கா, ஐரோப்பியா, மத்திய கிழக்கு,வட ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் மூன் அல்ட்ரா சொகுசு ஹோட்டல் கொண்டுவரப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

First published:

Tags: Dubai, Resort, Space