AN ITALIAN COUPLE WHO MET ON THEIR BALCONIES DURING QUARANTINE ARE NOW ENGAGED IN THE SAME CITY VIN
#Trending | இத்தாலியின் நவீன ரோமியோ ஜூலியட்.. ஊரடங்கு காலத்தில் பால்கனியில் காதல் வளர்த்த ஜோடியின் முதல் சந்திப்பு..
பால்கனியில் காதல் வளர்த்த ஜோடி
இத்தாலியே இவர்களை நவீன ரோமியோ - ஜூலியட் என அழைக்கத் தொடங்கியது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் முதன்முறையாக சந்தித்த இருவரும் விரைவில் திருமண தேதியை அறிவிக்க உள்ளனர்.
இத்தாலியில் ரோமியோ - ஜூலியட் கதை நிகழ்ந்த வெரோனாவில் வசிக்கும் காதல் ஜோடி சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி இருக்கின்றனர்.
ஊரடங்கு காலத்தில் எல்லோரும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்க மைக்கேல் டி அல்பாஸ் வசித்த அபார்ட்மெண்ட்டில் வயலின் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எல்லோரும் பால்கனிகளில் இருந்தபடியே வயலின் கச்சேரியை ரசிக்க, வயலின் வாசித்த பெண்ணின் அக்காவான பாலோ அக்னெல்லியை (Paola Agnelli) பார்த்தார் மைக்கேல். பார்த்தவுடன் இருவருக்கும் காதல் பற்றிக் கொள்ள இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்புகொண்டு காதல் வளர்த்து வந்தனர்.
அதீத காதலால் பாலோவின் பெயரை ஒரு துணியில் வரைந்து தன் குடியிருப்பின் உச்சியில் மைக்கேல் பறக்கவிட, இத்தாலியே இவர்களை நவீன ரோமியோ - ஜூலியட் என அழைக்கத் தொடங்கியது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் முதன்முறையாக சந்தித்த இருவரும் விரைவில் திருமண தேதியை அறிவிக்க உள்ளனர்.