ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மணமக்கள் உலகிலேயே முதன்முறையாக KFC தீமில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
திருமணம் செய்துகொள்வதைக் கூட வித்தியாசமாக செய்துகொள்ள வேண்டும். பல வண்ணத் தீம்களில் அலங்கரிக்கப்பட்ட திருமண நிகழ்வை ஊரே பேச வேண்டும் என்பதுதான் இன்று பலரது ஆசையும்.
திட்டமிட்டு, பார்த்துப் பார்த்துச் செய்யப்படும் Theme Wedding, Wedding Destination-க்காக எவ்வளவு பொருட்செலவு செய்வதற்கும் தயாராக உள்ளனர். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து டூவாம்பாவைச் சேர்ந்த கேட் மற்றும் ஹேரிசன் கேன் ஆகிய இருவரும் KFC-தீமில் தங்கள் திருமணத்தை நிகழ்த்தியுள்ளனர்.

KFC தீமில் திருமணம்
KFC, கடந்த ஆண்டு தங்களுடைய அதிகாரப்பூர்வ திருமண சேவையை அறிவித்தது. அதன் முதல் வின்னராக கேட் மற்றும் ஹேரிசன் வெற்றி பெற்றுள்ளனர். அந்தச் சேவையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

KFC தீமில் திருமணம்
இந்தத் திருமணத்தில் 150 பேருக்கு மேல் பங்கேற்றுள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் வந்தவர்களில் பலருக்கும் யாருடைய திருமணத்திற்கு செல்கிறோம் என்பதே தெரியாது. மணமக்களுக்கும் வாழ்த்தியவர்கள் யார் என்று தெரியாது. KFC தங்களுடைய தொடர் வாடிக்கையாளர்களுக்கு வைத்த அழைப்பை ஏற்று பலரும் திருமணத்துக்கு வந்திருந்தனர்.
திருமணத்தில் உணவு ஃபாஸ்ட் ஃபுட், KFC சிக்கன் வகைகள்,பொழுதுபோக்க கொலனெல் பாணி KFC பாடகர்கள், KFC பக்கெட் அலங்காரம், உணவு சாப்பிடும் இடம் KFC ஃபுட் டிரக் என அனைத்தும் KFC தீமில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த ஜோடி KFC-யில் தான் முதல் முதலாக சந்தித்து, டேட்டிங் சென்று காதலர்களாக மாறியுள்ளனர். தற்போது அதே KFC-இல் திருமணம் செய்துகொண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.