ஹோம் /நியூஸ் /உலகம் /

நேபாள விமான விபத்து... 68 பேர் உடல் கருகி பலி! - 5 இந்தியர்களின் நிலை என்ன?

நேபாள விமான விபத்து... 68 பேர் உடல் கருகி பலி! - 5 இந்தியர்களின் நிலை என்ன?

விபத்துக்குள்ளான விமானம்

விபத்துக்குள்ளான விமானம்

Nepal flight accident | பொக்ரா விமானநிலையத்தில் தரையிறங்க முயன்ற விமானம் ஓடுபாதையில் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • internati, Indianepal nepal nepal

நேபாளத்தில் ஓடு பாதையில் மோதி விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில் 68 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேபாள நாட்டின் பொக்ரா விமான நிலைய ஓடுபாதையில் மோதி Yeti ஏர்லைன்ஸ் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. 72 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் 68 பயணிகள் பயணித்துள்ளனர்.

மலைகள் சூழ்ந்த பொக்ரா விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது ஓடு பாதையில் மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 68 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விமானத்தில் இந்தியர்கள் 5 பேர் பயணித்தது குறிப்பிடத்தக்கது.

விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

..

First published:

Tags: Accident, Flight Accident, Nepal