2008 Go20 : பூமியை கடக்கும் சிறுகோள்... 18,000 மைல் வேகத்தில் வருகிறது - நாசா தகவல்

2008 Go20

இதன் அளவு தாஜ்மஹாலை போல மூன்று மடங்கு பெரிதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    ஜூலை  24ஆம் தேதி பூமியை சிறுகோள் ஒன்று கடக்க உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா தெரிவித்துள்ளது. இதன் அளவு தாஜ்மஹாலை போல மூன்று மடங்கு பெரிதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுகோளுக்கு ‘2008 Go20’ என பெயரிடப்பட்டுள்ளது.

    இது மணிக்கு 18,000 மைல் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்திய நேரப்படி வரும் 24ஆம் தேதி அன்று நள்ளிரவு 1 மணி அளவில் இந்த சிறுகோள் பூமியை கடக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இதன் நகர்வை நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பூமிகு ஆபத்தா?

    ‘2008 Go20’ என்ற இந்த சிறுகோள் 220 மீட்டர் விட்டம் கொண்டது. இந்த கோள் அதிவேகமாக பயணிப்பதால், அதன் பாதையின் குறுக்கே எது வந்தாலும் தகர்த்தெறியப்படும். 287 கோடி கிலோ மீட்டர் தொலைவில் பறக்கிறது. அது பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தொலைவை போன்று 8 மடங்காகும். எனவே, இந்த சிறுகோள் பூமியைக் கடந்து பாதுகாப்பாக நகர்ந்து செல்லும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

    எனவே, இந்த சிறுகோள் பூமிக்கு எந்தவித சேதத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய குடும்பத்தை சுற்றி நிறைய சிறுகோள்கள் சுழன்று வருகின்றன. கோள்கள் உருவாக்கத்திலிருந்து எஞ்சியவையே சிறுகோள்கள் என அறியப்படுகிறது.

    அரிய வானியல் நிகழ்வு அல்ல

    இவ்வாறு சிறுகோள் பூமிக்கு அருகில் வருவது, ஒரு அரிய வானியல் நிகழ்வு அல்ல. இந்நிலையில், ஜூலை 24ஆம் தேதி ‘2008 GO20’ன் வருகைக்குப் பிறகு, 2021ல் ‘2020 BW12’ மற்றும் ‘2019 YM6’ என பெயரிடப்பட்டுள்ளவையும் பூமிக்கு அருகில் பறந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Must Read : கேரளாவில் வசிக்கும் தமிழர், கன்னடர்களுக்கு புதிய வாய்ப்புகள்!

    செவ்வாய் கிரகத்தில் மண் மாதிரிகள் சேகரிப்பு

    இந்நிலையில், செவ்வாய் கிரகத்திலிருந்து மண் மாதிரிகளை பெர்சவரன்ஸ் விண்கலம் மூலம் சேகரிக்கும் பணி அடுத்த சில நாட்களில் தொடங்கும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்டத்தக்கது.
    Published by:Suresh V
    First published: