• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • தாலிபான்களை ரத்த வேட்டையாடிய அம்ருல்லா சலே யார்? இப்போது எங்கே?  இவர் ஏன் தன்னை ஆப்கன் அதிபராக அறிவித்துக் கொள்கிறார்?

தாலிபான்களை ரத்த வேட்டையாடிய அம்ருல்லா சலே யார்? இப்போது எங்கே?  இவர் ஏன் தன்னை ஆப்கன் அதிபராக அறிவித்துக் கொள்கிறார்?

தன்னை அதிபராக அறிவித்துக் கொள்ளும் அம்ருல்லா சலே.

தன்னை அதிபராக அறிவித்துக் கொள்ளும் அம்ருல்லா சலே.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் பிடித்து விட்டு அவர்கள் ஒருபுறம் நாங்கதான் என்று கூறிவரும் நிலையில், அஷ்ரப் கனி தலைமறைவான பிறகு நான் தான் அதிபர் என்று கூறிவரும் இந்த அம்ருல்லா சலே என்பவர் யார்? அவர் ஏன் இப்படியெல்லாம் கூறிக் கொள்கிறார் என்பதைப் பார்ப்போம்.

  • Share this:
    ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் பிடித்து விட்டு அவர்கள் ஒருபுறம் நாங்கதான் என்று கூறிவரும் நிலையில், அஷ்ரப் கனி தலைமறைவான பிறகு நான் தான் அதிபர் என்று கூறிவரும் இந்த அம்ருல்லா சலே என்பவர் யார்? அவர் ஏன் இப்படியெல்லாம் கூறிக் கொள்கிறார் என்பதைப் பார்ப்போம்.

    ஆகஸ்ட் 15ம் தேதி, தாலிபான்கள் காபூலில் நுழைந்தனர். அப்போது இந்த அம்ருல்லா சலே செய்த ட்வீட்டில், “தாலிபான் பயங்கரவாதிகளிடத்தில் ஒருநாளும், எந்த சூழ்நிலையிலும் அடிபணிய மாட்டேன். என் ஹீரோ அகமது ஷா மசூதின் ஆன்மா, வழிமுறைக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைக்க மாட்டேன். இவர்தான் கமாண்டர், லெஜண்ட், வழிகாட்டி. என் பேச்சைக் கேட்கும் லட்சக்கணக்கானோரை நான் ஏமாற்ற மாட்டேன், தாலிபான்களுடன் ஒரே கூரையின் கீழ் ஒருபோதும் இருக்க மாட்டேன், நெவர்” என்று பதிவிட்டிருந்தார்.

    இப்படிக்கூறும் இந்த அம்ருல்லா சலே யார்?

    அக்டோபர் 1972-ல் பிறந்த அம்ருல்லா சலே. தாஜிக் இனக்குழுவைச் சேர்ந்தவர், இளம் பிராயத்திலேயே பெற்றோரை இழந்து அநாதையானார். 1990-ம் ஆண்டு முதலே தாலிபான்களுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து வருபவர். கொரில்லா போராளி அகமத் ஷா மசூதுடன் இவர் இணைந்து தாலிபான்களுக்கு எதிராக சண்டையிட்டார். தாலிபான்கள் அதிகாரத்திலிருந்த போது இவர்கள் கொரில்லா போர் முறையில் அவர்களை எதிர்கொண்டனர்.

    1996ம் ஆண்டு இவரது சகோதரிடை தாலிபான்கள் சித்ரவதை செய்து கொன்றது. இது தொடர்பாக சலே கடந்த ஆண்டு டைம் இதழில் எழுதிய போது “1996-ல் இது நடந்த பிறகே தாலிபான்கள் பற்றிய என் பார்வை முற்றிலும் மாறியது” என்றார்.

    9/11, 2001 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவின் சிஐஏ-வின் பெரிய சொத்தாக பார்க்கப்பட்டார் அம்ருல்லா. சிஐஏவுடனான இவரது வலுவான உறவினால் புதிதாக உருவாக்கப்பட்ட ஆப்கான் உளவுத்துறை, தேசிய பாதுகாப்பு இயக்குனரகம் ஆகியவற்றுக்கு அம்ருல்லா தலைமை தாங்கினார்.

    அப்போது இவர்தான் பாகிஸ்தான் ராணுவம்தான் தாலிபான்களுக்கு ஆதரவு என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்தார். ஆனால் காபூலில் 2010-ல் நடந்த அமைதி மாநாட்டின் மீது நடத்தப்பட்ட கொடூரத்தாக்குதலுக்குப்பிறகு அம்ருல்லா இந்தப் பொறுப்புகளிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.

    டிசம்பர் 2018-ல் திருப்பு முனையாக அதிபர் அஷ்ரப் கனி, அம்ருல்லாவை உள்துறை அமைச்சராக்கினார். அப்படியே அதிலிருந்து துணை அதிபர் பதவிக்கு வந்தார்.

    பல கொலை முயற்சிகளுக்கு ஆளான சலே:

    அம்ருல்லா சலே பலமுறை கொலை முயற்சிகளுக்கு ஆளாகியுள்ளார். 2020 செப்டம்பரில் காபூல் குண்டு வீச்சில் காயமடைந்தார். இதில் 10 பேர் கொல்லப்பட்டனர். ஜூலை 18, 2019-ல் 3 தீவிரவாதிகள் சலேயின் அலுவலகத்துக்குள் நுழைந்து கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில் தற்கொலை குண்டு வெடித்ததில் 20 பேர் பலியாகினர். சலே உயிர் தப்பினாலும் இவருக்கு வேண்டப்பட்டவர்கள் இந்தத் தாக்குதலில் இறந்தனர்.

    தாலிபான்கள் பலரை நான் பெருமையுடன் கொன்றிருக்கிறேன், அதனால் அவர்கள் என்னைக் கொலை செய்தால் புகார் அளிக்க வேண்டாம். தாலிபான்களைக் கொல்வது என்பது என் ரத்தத்தில் ஊறிய ஒன்று, அவர்கள் தவறானவர்களென்று நான் ஆழமாக நம்புகிறேன் என்று ஒரு நேர்காணலில் கூறியவர்தான் இந்த அம்ருல்லா.

    இப்போது எங்கே?

    அம்ருல்லா சலே எங்கு இருக்கிறார் என்பது பற்றி அதிகாரபூர்வத் தகவல்கள் இல்லை. ஆப்கானின் பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் இருக்கலாம் என்று தெரிகிறது. இந்தப் பகுதி தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்கு இன்னும் வரவில்லை.

    ஆகஸ்ட் 16ம் தேதி இவரது புகைப்படம் வெளியானது. இவர் தாலிபான்களை 90களில் வேட்டையாடிய இவரது குருநாதர் மசூதின் மகனுடன் இருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியானது. மீண்டும் ஒரு கொரில்லா போர் உருவாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: