கொரோனா புதிய அலை காரணமாக சீனா கடந்த சில வாரங்களாக திணறி வருகிறது. சீனாவின் நிலைமை அந்நாட்டை மட்டுமல்லாது சர்வதேச நாடுகளை மீண்டும் பீதியடைய வைத்துள்ளது.
முதன்முதலில் கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பானது 2019ஆம் ஆண்டில் முதன்முதலாக சீனாவில்தான் கண்டறியப்பட்டது. இரண்டு ஆண்டுகளில், முககவசம், தடுப்பூசி உள்ளிட்ட யுக்திகளைக் கொண்டு கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அதேவேளை, சீனாவில் கடந்த சில வாரங்களாகவே உருமாறிய கொரோனா பரவல் தலைதூக்கியுள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து மருத்துவமனையில் கூட்டம் அலைமோதி வருகின்றன. அங்குள்ள மயானங்களில் உயிரிழந்தவர்களின் சடலங்களின் வரத்து வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து சீன தேசிய சுகாதார ஆணையம் நடத்திய ஆய்வு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசு ஆவணம் நேற்று சமூக வலைதளப் பக்கத்தில் பரவி வைரலானது. அதில் டிசம்பர் 1 முதல் 20ஆம் தேதி வரை சீனாவில் கிட்டத்தட்ட 25 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது பரபரப்பை கிளப்பிய நிலையில், சீனாவின் நிலைமை குறித்து உலக நாடுகள் மேலும் கவலை தெரிவிக்கத் தொடங்கின. இது போன்ற எதிர்வினைகளால் சீனா அரசு தற்போது புதிய முடிவை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: ரூ.33 கோடி ஜாக்பாட்..! துபாயில் வேலை செய்யும் இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்
இனி அந்நாட்டு சுகாதாரத்துறை தினசரி கொரோனா பாதிப்பு புள்ளிவிவரங்களை வெளியிட மாட்டோம் என அறிவித்துள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணத்தை சீனா அரசு கூறவில்லை. தங்களின் பிம்பம் சர்வதேச அரங்கில் சேதப்படுவதை விரும்பாமல் தான் சீனா இந்த முடிவை எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள புதிய அலை தொடக்க நிலையில்தான் உள்ளது, சீனா அரசு துரித நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாதிப்பு எண்ணிக்கை வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உச்சம் தொடும் என சர்வதேச ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: China, Corona spread, CoronaVirus, Covid-19