ஹோம் /நியூஸ் /உலகம் /

பதற்றமான சூழலில் இந்திய-சீன எல்லையில் விமானப்பைடை போர் பயிற்சி..

பதற்றமான சூழலில் இந்திய-சீன எல்லையில் விமானப்பைடை போர் பயிற்சி..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கடந்த 32 மாதங்களாக இந்திய-சீன எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் வடகிழக்கு மாகாணங்கள் பகுதியில் இந்திய விமானப்படை போர் பயிற்சி நடத்த திட்டமிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவும் சீனாவும் கிட்டத்தட்ட 3,800 கிலோமீட்டர் தூரத்தை தங்கள் இரு நாடுகளின் எல்லைகளாக பகிர்ந்து கொண்டுள்ளன. இந்தப் பகுதிகளில் அருணாச்சலப் பிரதேசதம் உள்ள பகுதியில் சீனா பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி ஊடுருவியதை தொடர்ந்து இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இரு தரப்பிலும் பல வீரர்கள் உயிரிழந்தனர். சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த நிகழ்வைத் தொடர்ந்து இரு நாட்டு தரப்பிலும் ராணுவ ரீதியாகவும் ராஜாங்க ரீதியாகவும் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் சுமூகத் தீர்வு எட்டப்படவில்லை.

குறிப்பாக சீனா பேச்சுவார்த்தையின் போது எடுக்கும் முடிவின் படி நடந்து கொள்வதில்லை என இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. அதோடு, இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் சீன அத்துமீற கட்டுமானங்களை அமைத்து வருவதாகவும் இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. இதனால் கிட்டத்தட்ட கடந்த 32 மாதங்களாக எல்ஏசி எனப்படும் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் தொடடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் வரும் பிப்பரவரி 1ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு வடகிழக்கு பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட இந்திய விமானப்படை முடிவெடுத்துள்ளது. விமானப்படையின் கிழக்க பிராந்திய படைப் பிரிவு இந்த போர் பயிற்சியில் ஈடுபட உள்ளது. விமானப்படையின் அனைத்து பிரிவுகளும் இந்த பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதற்காக கிழக்கு பிராந்திய விமானப்டையின் தலைமையகமான ஷில்லங்கில் தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன.

Read More : மேகத்திற்குள் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்… தொலைநோக்கி மூலம் ஆராயும் விஞ்ஞானிகள்..!

அருணாச்சலப் பிரதேசம், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில எல்லைகளில் முன்னனி போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மூலம் இந்தப் பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹசிமாரா, டேஸ்பூர் மற்றும் சௌபா உள்ளிட்ட ராணுவ விமான தளங்களில் இருந்து இந்த பயிற்சிகள் நடைபெற உள்ளன. இந்த பயிற்சியில் விமானப்படையி்ல் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ரஃபேல் போர் விமானங்களோடு, சுகோய்-30 MKI போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளன.

தவாங் செக்டார் பகுதியில் உள்ள யாங்ட்ஸே பகுதியில் இந்திய-சீன துருப்புகளுக்கிடையே மோதல் ஏற்பட்ட சில நாட்களில் கடந்த மாதம் இரண்டு நாட்கள் மாதிரி போர் ஒத்திகையை விமானப்படை நடத்தியிருந்தது. இந்த நிலையில் அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெற உள்ள ஐந்து நாள் போர் ஒத்திகையில் சூப்பர் ஹெர்குலிஸ் விமானம், சைனூக் ஹெவிலிஃப்டர் மற்றும் அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல்கள்தெரிவிக்கின்றன. இந்திய எல்லைப் பகுதியான கிழக்கு லாடாக் பகுதிக்கு கனரக ஆயுதங்களுடன் சுமார் 50 ஆயிரம் வீரர்களை இடம் பெயரச் செய்துள்ளது.

வீரர்களை திரும்ப பெறவும் சீன மறுத்துள்ளது. இந்த நிலையில் மிகப்பெரிய போர் பயிற்சி ஒத்திகையை நடத்த இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான 3,488 கிலோ மீட்டர் தூரத்தையும் கவர் செய்யும் வகையில் சீன விமானப்படை தங்கள் பகுதியில் உள்ள ஹோடான், ஹஸ்கார், கர்குன்ஸா,ஷாகாஸ்டே உள்ளிட்ட ராணுவ விமான தளங்களில் ஓடுபாதையை நீளப்படுத்தியும், ஆயுதங்களை குவித்தும் வருகிறது. இதற்கு பதிலடியாகத்தான் இந்த போர் ஒத்திகை இருக்கும் என விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செய்தியாளர் : ரொசாரியோ ராய்

First published:

Tags: China, India