Home /News /international /

அரசை விமர்சித்த அமைச்சரை பதவி நீக்கம் செய்த இலங்கை அதிபர்!

அரசை விமர்சித்த அமைச்சரை பதவி நீக்கம் செய்த இலங்கை அதிபர்!

Gotapaya Rajapaksa

Gotapaya Rajapaksa

உணவுப் பஞ்சம் விரைவில் ஏற்படலாம் என பேசியதற்காக கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தான் விவசாயச் செயலரையும் அதிபர் பணியிலிருந்து நீக்கியிருந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசை விமர்சித்த முக்கிய அமைச்சர் மற்றும் அதிகாரிகளை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி நீக்கம் செய்துள்ளதுடன், அரசை விமர்சிப்பவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக சுற்றுலாவை பெரிதும் நம்பியிருக்கும் இலங்கை, கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருக்கிறது. நாட்டின் பணவீக்கம் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.

திவால் நிலையில் இலங்கை பொருளாதாரம்:

உலக வங்கியின் கூற்றுப்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து வறுமையின் பிடியில் சிக்கிய தனிநபர்களின் எண்ணிக்கை 11.7 சதவீதம் அல்லது அரை மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்திருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இலங்கை அரசு திவால் நிலையை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

புதிய விவசாயக் கொள்கை:

இதனிடையே, இயற்கை விவசாயத்துக்கு முற்றிலும் மாற வேண்டும் எனவும், செயற்கை உரங்கள் பயன்பாட்டுக்கு தடை விதிப்பதாகவும், விவசாய கொள்கையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பெரிய மாற்றத்தை கொண்டுவந்தார். ஆனால் இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. உரங்கள் பயன்படுத்த முடியாமல் பயிர்கள் அனைத்தும் கருகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில் இலங்கை பெரும் உணவுப் பஞ்சம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

Also read:  திவாலாகும் இலங்கை அரசு.. ஸ்தம்பித்த பொருளாதாரம் - மகிந்த ராஜபக்சே பதவி விலகல்?

இலங்கை அதிபரின் புதிய விவசாயக் கொள்கை தவறானது, உணவுப் பொருட்கள் கடுமையாக விலையேற்றம் அடைந்திருக்கிறது என ஆளும் கட்சியின் முக்கிய தலைவரும், மத்திய அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த இலங்கை அரசை விமர்சித்து பேசியிருந்தார். இதனால் அதிருப்தியடைந்த அதிபர் கோத்தபய ராஜபக்ச அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார். பொதுமக்களுக்கு ஆதரவாக பேசிய அமைச்சரை பதவியில் இருந்து நீக்கியது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. உணவுப் பஞ்சம் விரைவில் ஏற்படலாம் என பேசியதற்காக கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தான் விவசாயச் செயலரையும் அதிபர் பணியிலிருந்து நீக்கியிருந்தார்.

Also read:  பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கும்? பயண திட்டங்கள், தவறுகளுக்கு யார் பொறுப்பு? - Explainer

மேலும், அரசை விமர்சித்து ஆளும் பிரமுகர்கள் தனிப்பட்ட முறையில் பேசி வருவதை அறிந்த அதிபர் கோத்தபய ராஜபக்ச, அரசுக்கு எதிராக பொதுவெளியில் பேசும் அமைச்சர்கள், எம்.பிக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தங்கள் சொந்த கட்சிக்கும், அரசுக்கும் எதிராக பேசுவது தர்மம் கிடையாது. ஏதேனும் பிரச்னை இருந்தால் அதனை அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கலாம் அல்லது ஆலோசிக்கலாம், அதை விட்டு மீடியா முன்னிலையில் அரசை விமர்சிக்கக் கூடாது என அவர் தெரிவித்தார். அதிபராவதற்கு முன்னதாக ஈழப் போரின் போது இலங்கையின் ராணுவ தளபதியாக இருந்தவர் என்பதால் அவர் எச்சரிக்கை விடுத்த பின்னர் ஆளும் கட்சி முகாமில் எதிர்க்குரல் எழுப்ப திட்டமிட்டவர்கள் தற்போது அடங்கிப் போயுள்ளனர்.

மகிந்த ராஜபக்ச ராஜினாமா?

இதற்கிடையே கடந்த இரண்டு தினங்களாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. நாட்டின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அவருக்கு பதிலாக பிரதமர் பொறுப்புக்கு கொண்டுவரப்பட இருப்பதாகவும் தகவல்கள் கூறின.

Also read:  குடும்ப வாழ்க்கையை தொடங்க 'நல்ல நேரம்' அமையவில்லை என 11 ஆண்டுகளாக கணவரை காக்க வைத்த மனைவி - பரபரப்பு வழக்கு

இருப்பினும் இந்த தகவல்களை இலங்கை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலக எவ்வித திட்டமும் வைத்திருக்கவில்லை. இது போன்ற தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. பொதுமக்களை தவறாக வழிநடத்தும் இதுபோன்ற கட்டுக்கதைகளை நான் வன்மையாக நிராகரிக்கிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Arun
First published:

Tags: Gotabaya Rajapaksa, Mahinda rajapaksa, Srilanka

அடுத்த செய்தி