இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடந்தாண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. சுற்றுலா வருவாயை பெரிதும் நம்பி இருக்கும் இலங்கையில் கொரோனா பெருந்தொற்று தாக்கம் பொருளாதாரத்தை முற்றிலும் முடக்கப் போட்டது.
அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொட்ட நிலையில், மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். ஒரு கட்டத்தில் மக்கள் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் கோத்தபய ராஜபக்ச மற்றும் மகிந்தா ராஜபக்ச முறையே அதிபர் மற்றும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினர். தொடர்ந்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார்.
இந்நிலையில், பொருளாதாரத்தை மீட்டு கடனை குறைக்க இலங்கை அரசு தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய நகர்வாக இலங்கை தனது ராணுவ பலத்தை பாதியாக குறைக்க முடிவெடுத்துள்ளது. இலங்கையின் பட்ஜெட் செலவில் 10 சதவீதம் ராணுவத்திற்கு செல்கிறது. விடுதலை புலிகள் இயக்கத்தை முடக்க ராணுவ பலத்தை பன்மடங்கு பெருக்கிய இலங்கை அரசு, போர் உச்சத்தில் இருந்த 2009ஆம் ஆண்டு காலகட்டத்தில் 4 லட்சம் ராணுவ வீரர்களை பணியில் வைத்திருந்தது.
இதையும் படிங்க: இலங்கை ஈஸ்டா் தின குண்டுவெடிப்புக்காக சிறிசேனாவுக்கு ரூ.10 கோடி அபராதம்!
இந்நிலையில், இலங்கையில் தற்போதைய ராணுவ பலம் 2 லட்சமாக உள்ள நிலையில், அடுத்தாண்டு இந்த எண்ணிக்கையை ஒரு லட்சத்து 35 ஆயிரமாக குறைக்க திட்டமிட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் 2 லட்சம் என்ற எண்ணிக்கையை பாதியாக குறைத்து ஒரு லட்சமாக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க முடியாமல் திணறி வருவதாக இலங்கை அரசு கடந்த வாரம் கவலை தெரிவித்திருந்தது .அதன் தொடர்ச்சியாக இந்த முடிவை எடுத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Economy, Ranil Wickremesinghe, Sri Lanka