ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய வம்சாசளியைச் சேர்ந்த 3 பெண்கள்!

21 வயது முதல் 92 வயதுள்ள பெண்கள் தகுதியானவர்களாக கொண்டு ஃபோர்ப்ஸ் இந்த பட்டியலை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய வம்சாசளியைச் சேர்ந்த 3 பெண்கள்!
ஜெயஸ்ரீ உல்லால்,  நீரஜா சேத்தி, நேஹா நர்கெடே
  • News18
  • Last Updated: June 8, 2019, 9:44 AM IST
  • Share this:
அமெரிக்காவில் சுயமாக சாதித்த பெண்கள் என்ற ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பெண்கள் இடம் பிடித்துள்ளனர்.

உலகின் தலைசிறந்த பிரபலங்களை பல தரவுகளின் அடிப்படையில் தரவரிசை பட்டியலிடுவதில் மிகப்பிரபலமானது ஃபோர்ப்ஸ் நிறுவனம். ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் பல துறை பிரபலங்களை பட்டியலிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்திய தரவரிசை பட்டியலில், 3 இந்திய வம்சாவளியினருக்கு இந்த பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் சுயமாக சாதித்த பெண்கள் என்ற இந்தாண்டுக்கான பட்டியலில், 21 வயது முதல் 92 வயதுள்ள பெண்கள் தகுதியானவர்களாக கொண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் 80 இடங்கள் பிடித்தோரை ஃபோர்ப்ஸ் பட்டியலிட்டுள்ளது.


அதன்படி, டயானா ஹென்ட்ரிக்ஸ் முதலிடம் பிடித்துள்ளார்.  அரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெயஸ்ரீ உல்லால் 140 கோடி அமெரிக்க டாலர்கள் சொத்துக்களுடன் 18-வது இடம்பிடித்துள்ளார். இவர் லண்டனில் பிறந்து இந்தியாவில் வளர்ந்தவராவார்.

ஜெயஸ்ரீ உல்லால்


இதேபோல் சின்டெல் நிறுவனத்தை உருவாக்கிய நீரஜா சேத்திக்கு 23-ம் இடம் கிடைத்துள்ளது. நீரஜாவின் சொத்து மதிப்பு 100 கோடி அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 60-வது இடத்தை நேஹா நர்கெடே பிடித்துள்ளார்.  இவரின் சொத்து மதிப்போ 36 கோடி டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நேஹா நர்கெடே


இதேபோல் பிரபல பாடகியும் நடிகையுமான ரிகானாவுக்கும் பட்டியலில் 37-வதுஇடம் கிடைத்துள்ளது. ரிகானாவின் சொத்து மதிப்பு 60 கோடி அமெரிக்க டாலர்கள் என்று தெரியவந்துள்ளது.

Also see... NEET RESULT நீட் தேர்வில் தமிழகத்தில் 48.57% பேர் தேர்ச்சி!

Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see... 
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading