ஹோம் /நியூஸ் /உலகம் /

அடுத்தடுத்து வேலைக்கு ஆப்பு வைத்த அமெரிக்க நிறுவனங்கள்.. திணறும் இந்தியர்கள்..!

அடுத்தடுத்து வேலைக்கு ஆப்பு வைத்த அமெரிக்க நிறுவனங்கள்.. திணறும் இந்தியர்கள்..!

மாதிரி படம்

மாதிரி படம்

America job lay off | உலக பெருநிறுவனங்கள் 2023-ஆம் ஆண்டு ஜனவரியில் மட்டும் 55 ஆயிரத்து 970 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • interna, Indiaamericaamerica

கூகுள், அமேசான். மைக்ரோசாப்ட் உள்ளிட்ட உலக பெருநிறுவனங்கள் 2023ஆம் ஆண்டு ஜனவரியில் மட்டும் 55 ஆயிரத்து 970 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. இது கடந்த ஆண்டு முழுவதில் செய்யப்பட்ட பணிநீக்கத்தில் 35 சதவிகிதமாகும்

பெருநிறுவனங்களின் இந்த பணி நீக்க நடவடிக்கை அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் புதிய வேலையைத் தேடிக்கொள்ளாவிட்டால், அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் சூழலில் வேலை இழந்த இந்தியர்கள் தவித்து வருகின்றனர். .

2022ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தகவல்தொழில் நுட்பத் துறையில் 2 லட்சம் பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், அமேசான், ட்விட்டர் நிறுவனங்களி்ல் இருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலையிழந்துள்ளனர். வேலையிழந்த ஊழியர்களில் 30 முதல் 40 சதவீதம் இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் வல்லுநர்கள். இவர்கள் அனைவரும் எச்-1பி, எல்1 விசாவில் அமெரிக்கா வந்தவர்கள். எச்-1பி விசா என்பது, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை அமெரிக்க நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு வேலைக்கு எடுப்பதாகும்.

எல்1ஏ-எல்1பி விசா என்பது, தற்காலிகமாக நிறுவனங்களுக்குள் ஊழியர்களை மாற்றிக்கொள்ளும் விசாவாகும்.

இதில் பெரும்பாலான இந்திய ஐடிதொழில்நுட்ப வல்லுநர்கள், எச்-1பி, எல்1 விசாவில் அமெரிக்காவில் தங்கி பணியாற்றி வருகின்றனர். தற்போது ஆயிரக்கணக்கான இந்திய ஐடி பொறியாளர்கள் வேலையிழந்துவிட்டதால் அடுத்த வேலையைத் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் பணியாளர்களை நீக்கம் செய்து வருவதால் புதிய வேலை கிடைப்பது சவாலானதாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் 60 நாட்களுக்குள் புதிய வேலையில் அமராவிட்டால் , அமெரிக்காவை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். இதனால் ஏராளமான வாட்ஸ் அப் குழுக்களை தொடங்கி வேலை வாய்ப்பு குறித்த தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். பெருநிறுவனங்கள் ஆண்டின் தொடக்கத்தில், தங்களுக்கான குறிக்கோளை நிர்ணயித்து அதனை அடையும் வகையில் பணிபுரிகின்றன. அதன்படி புதிய திட்டமிடல் மற்றும் நிதி ஒதுக்கீட்டிற்காக ஜனவரி மாதத்தில் அதிக ஆட்குறைப்பில் ஈடுபடுவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா காலத்தில் தொழிற்நுட்பத்தின் பயன்பாடு மட்டுப்பட்டதாக தெரிவிக்கும் நிபுணர்கள், அதற்கு பதிலாக மனித வளத்தை நாடியதாகவும் அதற்காக வீட்டிலிருந்து பணிபுரிய ஏராளமானவர்களுக்கு வாய்ப்பளித்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது . தொழில்நுட்ப பயன்பாடு மீண்டும் திரும்பியுள்ளதால் ஆட்குறைப்பு அதிகரித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெறும் போர், அமெரிக்க பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவும் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வருகின்றன. உலக அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம் நிலவுவதாலும் பெரு நிறுவனங்கள் பணியாளர்களை குறைத்து வருகின்றன.

First published:

Tags: America, Jobs