முகப்பு /செய்தி /உலகம் / Billie Eilish | ''11 வயதில் ஆபாச படம் பார்க்க ஆரம்பித்தேன். அது என்னை...'' - அனுபவம் பகிர்ந்த பிரபல பாடகி

Billie Eilish | ''11 வயதில் ஆபாச படம் பார்க்க ஆரம்பித்தேன். அது என்னை...'' - அனுபவம் பகிர்ந்த பிரபல பாடகி

163 முறை பில் எய்லிஷ் பல்வேறு இசை தொடர்பான விருதுகளுக்கு பரிந்து செய்யப்பட்டு, 64 விருதுகளை வாங்கியுள்ளார். அவற்றுள் 7 கிராம்மி விருதுகள் அடங்கும்.

163 முறை பில் எய்லிஷ் பல்வேறு இசை தொடர்பான விருதுகளுக்கு பரிந்து செய்யப்பட்டு, 64 விருதுகளை வாங்கியுள்ளார். அவற்றுள் 7 கிராம்மி விருதுகள் அடங்கும்.

163 முறை பில் எய்லிஷ் பல்வேறு இசை தொடர்பான விருதுகளுக்கு பரிந்து செய்யப்பட்டு, 64 விருதுகளை வாங்கியுள்ளார். அவற்றுள் 7 கிராம்மி விருதுகள் அடங்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

11 வயதில் இருந்து ஆபாசப் படம் பார்க்க ஆரம்பித்ததால், தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபங்கள் குறித்து பிரபல அமெரிக்க பாடகி பில் எய்லிஷ் மனம் திறந்துள்ளார். அவரது பதிவு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி பில் எய்லிஷுக்கு 19 வயது ஆகிறது. இந்த சிறிய வயதில், பல மில்லியன் டாலர்களுக்கு அதிபதியானதுடன், உலகின் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராக இருக்கிறார். 163 முறை அவர் பல்வேறு இசை தொடர்பான விருதுகளுக்கு பரிந்து செய்யப்பட்டு, 64 விருதுகளை வாங்கியுள்ளார். அவற்றுள் 7 கிராம்மி விருதுகள் அடங்கும்.

இதையும் படிங்க : கோலி-ரோகித் இடையே என்ன பிரச்சனை?- அசாருதீன் சொல்லலாமே’

இந்நிலையில் ரேடியோ ஒன்றுக்கு பேட்டியளித்த எய்லிஷ், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். பேட்டியின்போது அவர் கூறியதாவது-

நான் சின்ன வயதிலேயே ஆபாச படங்களை பார்க்க ஆரம்பித்து விட்டேன். நேர்மையாக பதில் சொல்ல வேண்டும் என்றால், நான் அதிக எண்ணிக்கையில் அந்த படங்களை பார்ப்பேன். அப்போது எனக்கு 11 வயதுதான் இருக்கும். இதனால் எனது மூளை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த பழக்கம் என்னை ஆபாசமாக நடந்து கொள்ளவும் வழி வகுத்தது.

ஆபாச படங்களில் இடம்பெற்றிருந்த காட்சிகள், என் மனதை காயப்படுத்தின. அவற்றை பார்ப்பது கெட்ட பழக்கம் என்று முதலில் எனக்கு தெரியாது. உடலுறவை கற்றுக் கொள்ளும் ஒரு கல்வியாகத்தான் அனை நான் பார்த்தேன் நீங்கள் அதிகமாக ஆபாச படங்கள் பார்த்தீர்கள் என்றால், இயல்பான உடலுறவு இன்பத்தை அனுபவிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க :விண்வெளிக்கு சென்று உணவு ஆர்டரை டெலிவரி செய்த கோடீஸ்வரர்... வைரல் வீடியோ

இளம் வயதில் ஆபாச படங்களை பார்ப்பது, தீங்கை ஏற்படுத்தும் என்பதை மருத்து வல்லுனர்கள் ஒப்புக் கொள்கின்றனர். ''மனநிலை பாதிப்பு, மோசமான உடல்நிலை போன்றவற்றை ஏற்படுத்துவதுடன் எதிர்மறையான போக்கை ஆபாச படங்கள் பார்ப்பது உருவாக்கும்'' என்று சிறார் நலனுக்கான ஐ.நா. அமைப்பான யூனிசெஃப் கூறியுள்ளது.

இதையும் படிங்க : பெண்களின் திருமண வயது 21ஆக உயர்வு

First published:

Tags: Child Abuse, UNICEF