அமெரிக்க அதிபராக வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனுக்கும் இந்தியாவுடன் தொடர்பு

கமலா ஹாரிசுக்கு இந்திய தொடர்பு இருப்பதுபோல் தனக்கும் இந்திய தொடர்பு இருப்பதை பல ஆண்டு காலமாக வலியுறுத்தி வருகிறார் ஜோ பைடன்.

அமெரிக்க அதிபராக வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனுக்கும் இந்தியாவுடன் தொடர்பு
ஜோ பைடன்
  • Share this:
அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும், அதிலும் குறிப்பாக, முதல் பெண்ணாக அவர் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் இந்திய மக்களுக்கு உற்சாகமளிக்கும் செய்தியாக இருந்தது. கமலா ஹாரிசுக்கு இந்திய தொடர்பு இருப்பதுபோல் தனக்கும் இந்திய தொடர்பு இருப்பதை பல ஆண்டு காலமாக வலியுறுத்தி வருகிறார் அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன்.

1988 மற்றும் 2008ம் ஆண்டுகளில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் தோல்வியுற்ற பைடன், தனது 3-வது முயற்சியில் 77 வயதில் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றில் மிக குறைந்த வயதில் செனட்டராகவும், மிக அதிக வயதில் அதிபராகவும் தேர்வு பெற்ற பெருமை ஜோ பைடனுக்கு மட்டுமே உண்டு.

Also read: H1B விசா மூலம் அமெரிக்காவில் குடியேறுவோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு.. ஜோ பைடனின் திட்டத்தால் பயனடையும் இந்தியர்கள்..


கிழக்கு இந்திய கம்பெனிக்குச் சொந்தமான கப்பலில் 1,800களில் கேப்டனாக இருந்த மூதாதையரான ஜார்ஜ் பைடன் 51வது வயதில் ரங்கூனில் இறந்ததாக ஜோ தெரிவித்துள்ளார். ஜார்ஜ் பைடன், இந்தியப் பெண்ணை மணந்ததாகவும் ஜார்ஜின் சகோதரர் சென்னையில் தங்கி வாழ்ந்து மறைந்ததாகவும் ஜோ பைடன் கூறுகிறார்.
First published: November 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading